மலையாள இயக்குநருடன் கைகோக்கும் யோகிபாபு.. ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்..
மலையாள இயக்குநர் ரெஜிஸ் மிதிலா இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான யோகி படம் மூலம் அறிமுகமானவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த யோகிபாபு தற்போது கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர். இயல்பான அணுகுமுறையும், டைமிங் வசனங்களும் யோகிபாபுவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவந்த யோகிபாபு நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றார். அதனையடுத்து அவர் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா படம் மூலம் கோலிவுட்டின் ஹீரோக்கள் வரிசையில் இணைந்தார்.
அந்தப் படம் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருதுக்கும் மண்டேலா படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மண்டேலா படத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்க யோகிபாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருவதாக பேசப்பட்டது. ஆனால் அதனை யோகிபாபு மறுத்துவந்தார். மேலும் தான் நகைச்சுவை நடிகராக தொடரவே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் அவர் நடிகை லட்சுமி மேனனுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சமந்தாவுக்கு இழைக்கப்பட்டதா அநீதி...? இயக்குனர்களை நோக்கி பாயும் இடைவெளி கேள்விகள்!
இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ரெஜிஸ் மிதிலா, யோகி பாபுவை வைத்து ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளார். ஜனரஞ்சகமாக உருவாக இருக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். சென்னை மற்றும் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: மீண்டும் பேரரசுடன் இணைகிறாரா விஜய்? பிரபலம் கூறிய புதுத்தகவல்..
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: லண்டனுக்கு பறந்த டீம்.. சந்தோஷ் நாராயணன் கம்போஸிங்.. போட்டோ வைரல்!
23 ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் ஒட்டுமொத்தமாக இன்று வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ!
காதல் கதையில் யோகி பாபு… லவ்ஸ் செய்ய லக்ஷ்மி மேனன்… புதுமுக இயக்குனர் இயக்கத்தில் புதிய படம்!