மேலும் அறிய

23 ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் ஒட்டுமொத்தமாக இன்று வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ!

1962 முதல் 2015 வரை வெளிவந்த அனைத்து 23 ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் ஒட்டுமொத்தமாக இன்று வெளியிட்டிருக்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ. இதனால் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலக அளவில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளன. இதுவரை 6 பேர் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ள நிலையில், 25 ஆவது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் டேனியல் க்ரைக் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார். 1962 முதல் தொடங்கிய இந்த ஜேம்ஸ் பாண்ட் வைரஸ் இன்று வரை ரசிகர்களை விடாமல் துரத்தி வருகிறது. அத்தனை பெரிய ரசிகர் கூட்டத்தையும் கட்டி இழுக்க அமேசான் செய்த மாஸ்டர் ஸ்ட்ரோக்தான் இது. 1962 முதல் 2015 வரை வெளிவந்த அனைத்து 23 ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் ஒட்டுமொத்தமாக இன்று வெளியிட்டிருக்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ. இதனால் அமேசான் ப்ரைம் சப்ஸ்க்ரைபர்ஸும் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

23 ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் ஒட்டுமொத்தமாக இன்று வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ!

ப்ரைமில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் பட்டியல்:

ஸ்பெக்டர் - 2015 - டேனியல் க்ரெய்க்

ஸ்கைஃபால் - 2012 - டேனியல் க்ரெய்க்

குவாண்டம் ஆஃப் சொலேஸ் - 2008 - டேனியல் க்ரெய்க்

கசினோ ராயேல் - 2006 - டேனியல் க்ரெய்க்

டை அனதர் டே - 2002 - பீர்ஸ் ப்ரஸ்னன்

தி வேர்லடு இஸ் நாட் எனஃப் - 1999 - பீர்ஸ் ப்ரஸ்னன்

டுமாரோ நெவர் டைஸ் - 1997 - பீர்ஸ் ப்ரஸ்னன்

கோல்டன் ஐ - 1995 - பீர்ஸ் ப்ரஸ்னன்

லைசன்ஸ் டு கில் - 1989 - திமோதி டைட்டன்

தி லிவிங் டேலைட்ஸ் - 1987 - திமோதி டைட்டன்

எ வியூ டு எ கில் - 1985 - ரோஜர் மூர்

ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி - 1981 - ரோஜர் மூர்

மூன்ரேக்கர் - 1979 - ரோஜர் மூர்

தி ஸ்பை ஹு லவ்ட் மீ - 1977 - ரோஜர் மூர்

தி மேன் வித் கோல்டன் கன் - 1974 - ரோஜர் மூர்

லிவ் அண்ட் லெட் டை - 1973 - ரோஜர் மூர்

டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர் - 1971 - ஷான் கோனேரி

ஆன் ஹேர் மேஜஸ்டி சீக்ரட் சர்விஸ் - 1969 - ஜார்ஜ் லேசன்பி

யூ ஒன்லி லிவ் ட்வைஸ் - 1967 - ஷான் கோனேரி

தண்டர்பால் - 1965 - ஷான் கோனேரி

கோல்டுஃபிங்கர் - 1964 - ஷான் கோனேரி

ஃபிரம் ரஷ்யா வித் லவ் - 1963 - ஷான் கோனேரி

டாக்டர் நோ - 1962 - ஷான் கோனேரி

ஜேம்ஸ் பாண்ட் திரைவரிசையில் 25வது படம் 'நோ டைம் டு டை'. இந்த படத்தில் டேனியல் க்ரெய்க் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமே ஜேம்ஸ் பாண்டாக அவர் நடிக்கும் கடைசி படமாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம் கரோனா நெருக்கடியால் தொடர்ந்து பல முறை தள்ளிப்போய், ஒருவழியாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. கேரி ஜோஜி ஃபுகுநாகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரமி மாலெக் வில்லனாக நடித்திருந்தார்.இதனை அடுத்து இத்ரிஸ் எல்பா, டேனியல் கலூயா, ரிச்சர்ட் மேடன், டாம் ஹார்டி என பல நடிகர்களின் பெயர்கள் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக இருக்கலாம் என்ற யூகப் பட்டியலில் இடம்பிடித்தன. இந்நிலையில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹென்றி கெவிலும் தற்போது இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ‘கேசினா ராயல்’ படத்தின் நடிகர் தேர்வில் கலந்து கொண்டவர்களில் ஹென்றி கெவிலும் ஒருவர். ஆனால் அப்போது அந்த வாய்ப்பை டேனியல் க்ரெய்க் தட்டிச் சென்று விட்டார். தற்போது ஹென்றி கெவில் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் தொடர்பான நடிகர் தேர்வு 2022ஆம் ஆண்டுதான் தொடங்கவுள்ளது என்று அறிவித்த இந்த வதந்திக்கு படக்குழு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget