மேலும் அறிய

காதல் கதையில் யோகி பாபு… லவ்ஸ் செய்ய லக்ஷ்மி மேனன்… புதுமுக இயக்குனர் இயக்கத்தில் புதிய படம்!

காதல் கதை என்றாலும், யோகி பாபுவின் அக்மார்க் காமெடி படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருபவர் யோகிபாபு என்றால் மிகையாகாது. யோகி பாபு இருந்தால் மினிமம் கேரண்டி என்று டிஸ்ட்ரிபியூட்டர்கள் வரையறை வைத்திருப்பதே அவருடைய இருப்பை அதன் அவசியத்தை உணர்த்துகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே ஹீரோவாக நடிக்கத் துவங்கிய பின்பு, சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் இந்த இடத்தை நிரப்பியவர் காமெடி நடிகர் யோகி பாபு தான். மேலும் ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதே நேரத்தில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் எந்தவிதமான காமெடி காட்சியாக இருந்தாலும், காமெடி இல்லாத நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கர்ணன் படத்தில் வருவது போன்ற கதாப்பாத்திரங்களும் அவ்வபோது செய்து நடிகராகவும் தன்னை நிரூபிக்கிறார் யோகி பாபு. கடைசியாக இவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. 

காதல் கதையில் யோகி பாபு… லவ்ஸ் செய்ய லக்ஷ்மி மேனன்… புதுமுக இயக்குனர் இயக்கத்தில் புதிய படம்!

தற்போது முருகேஷ் பாபு எனும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்க உள்ளாராம். அந்த படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். காதல் கதை என்றாலும், யோகி பாபுவின் அக்மார்க் காமெடி படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியுள்ளாராம். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. கும்கி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான லட்சுமி மேனன், இதையடுத்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், என ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். வேதாளம் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த லக்‌ஷ்மி மேனனுக்கு அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பெரிதாக குறைந்தது. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜெயம் ரவியின் மிருதன், விஜய்சேதுபதியின் றெக்க உள்ளிட்ட படங்கள் சொதப்பவே அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்றே விலகி இருந்தார்.

காதல் கதையில் யோகி பாபு… லவ்ஸ் செய்ய லக்ஷ்மி மேனன்… புதுமுக இயக்குனர் இயக்கத்தில் புதிய படம்!

2016க்கு பிறகு சுமார் 4 ஆண்டுகள் லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு மீண்டும் கும்கி ஜோடியான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது. ஆனால், ஹிட் கொடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதையடுத்து இந்தாண்டு வெளியான புலிக்குத்தி பாண்டி படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர் தற்போது மீண்டும் பிசியாக நடித்து வருகிறார். யோகி பாபுவுக்கு, அவருடைய 2022 ரிலீஸ்களில் டாப் இரண்டு நடிகர்களின் படமான வலிமை, பீஸ்ட் என இரண்டும் உள்ளது, சிவகார்த்திகேயனின் அயலான், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, பின்னர் அவர் நாயகனாக நடிக்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பொம்மை நாயகி, காசேதான் கடவுளடா போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | மாணவிக்கு பாலியல் சீண்டல் சிக்கிய தலைமை ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து அதிரடி
ADMK Poster | செங்கோட்டையனுக்கு நன்றி” ஜெயலலிதா, ஓபிஎஸ் போட்டோ! அதிமுக உரிமை மீட்பு குழு போஸ்டர்
செங்கோட்டையனை சமாளிப்பாரா EPS?கொங்கில் பலவீனமாகும் அதிமுக? | Sengottaiyan vs EPS
டம்மியான மதராஸி 25 கோடிப்பே... பட்ஜெட்டை தொடுமா? | Rukmini | Madharaasi Collection
வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி உயிர் தப்பிய பாமக ம.க.ஸ்டாலின் ஆடுதுறை பேருராட்சியில் பரபரப்பு | PMK Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி? டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு! அதிமுக-வில் நடந்தது என்ன? #TTVDhinakaran #EPS #ADMK
பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி? டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு! அதிமுக-வில் நடந்தது என்ன?
EPS vs Senkottaiyan: இபிஎஸ் தலையில் இடி.. செங்கோட்டையனை எப்படி சமாளிப்பார் எடப்பாடியார்?
EPS vs Senkottaiyan: இபிஎஸ் தலையில் இடி.. செங்கோட்டையனை எப்படி சமாளிப்பார் எடப்பாடியார்?
Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.