SS RAJAMOULI :இது அடுத்த பிரம்மாண்டம்.. பாலிவுட்டின் டாப் ஸ்டார்களுடன் இணையும் ராஜமெளலி.. விவரம் உள்ளே..!
பிரம்மாஸ்திரம் பாகம் 1 படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி வழங்குகிறார்
பிரம்மாஸ்திரம் படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி, அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி மற்றும் Fox Star Studios உடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடுகிறார்.
SS.ராஜமௌலியின் பாகுபலி படத்தை இயக்குநர் கரண் ஜோஹர் பெருமிதத்துடன் வழங்கினார். இன்று, SS.ராஜமௌலி, அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம், உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின மோஷன் போஸ்டர் உடன் வெளியானது. பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியிடுவதற்காக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.
மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர். அவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய் மற்றும் அமிதாப்பச்சன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக இணைகின்றனர். இந்த திரைப்படத்தில் தற்போது இயக்குநர் SS.ராஜமௌலி இணைந்ததுள்ளார்.
இது குறித்து SS.ராஜமௌலி கூறுகையில், பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது, இது கதை மற்றும் காட்சியிலேயே தெரிகிறது. எனக்கு இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து உருவாக்கபட்டுள்ளது.
எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக அயனின் சினிமா இருக்கும். அயனின் பார்வை இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும். மேலும் பாகுபலிக்குப் பிறகு Dharma Productions உடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கரண் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, Fox Star Studios உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.
நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி கூறும்போது, “இயக்குநர் அயன் மற்றும் பிரம்மாஸ்திரம் திறமையான குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிக அருமையான அனுபவம். பண்டைய இந்தியா மற்றும் நவீன இந்தியா இரண்டின் கலவையாக உருவான இந்தப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
மேலும் இது போன்ற ஒரு மிகப்பிரமாண்ட திரைப்படத்தில் ஒரு பகுதியாக நானும் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. இயக்குநர் திரு.ராஜமௌலி இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையான விஷயம். மேலும் 2022 ஆம் ஆண்டில் எனது ரசிகர்களுக்கு இப்படத்தை வழங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்தப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று வெளியாகிறது.