மீண்டும் பேரரசுடன் இணைகிறாரா விஜய்? பிரபலம் கூறிய புதுத்தகவல்..
நடிகர் விஜய்யும், இயக்குநர் பேரரசுவும் மீண்டும் இணையவிருக்கிறார்கள் என ரவி மரியா கூறியுள்ளார்.
டி. ராஜேந்திரனிடம் உதவியாளராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த பேரரசு விஜய்யை வைத்து சிவகாசி, திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இரண்டு படங்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. மேலும், விஜய்யை பக்கா கமர்ஷியல் ஹீரோவாகவும், குடும்பங்களுக்கு பிடித்த நடிகராகவும் மாற்றிய சிறப்பு சிவகாசி, திருப்பாச்சி படங்களுக்கு உண்டு.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு பேரரசு கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்தார். அப்படி அவர் அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தை இயக்கினார். சிவகாசி, திருப்பாச்சி போல் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருப்பதி ஏமாற்றமே தந்தது. அதன் பிறகு பேரரசு அவ்வப்போது படங்களை இயக்கினாலும் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தன.
இதன் காரணமாக பேரரசுவின் மார்க்கெட் டல் அடித்தது. அதேசமயம் விஜய் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஹீரோவாகவும், பெரும் வியாபாரம் உடைய ஹீரோவாகவும் உருமாறினார். அதனையடுத்து அவர் பணியாற்றும் இயக்குநர்கள் ஒன்று முன்னணி இயக்குநர்களாக இருப்பார்கள் இல்லை இளம் இயக்க்குநர்களாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய் இயக்குநர் மீண்டும் பேரரசுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பட விழா ஒன்றில் பேசிய நடிகரும், இயக்குநருமான ரவி மரியா, நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் பேரரசு மீண்டும் ஒரு திரைப்படம் இயக்கப்போவதாகவும், அதற்கான வேலையை அவர் பார்த்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்,விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
விஜய் தற்போது இளம் இயக்குநர்களுடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் சூழலில் பேரரசு படத்தில் நடிக்க ஒத்துக்கொள்வாரா என்று தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க:‛போலீஸ் படமாக எடுக்க நினைக்கவில்லை... ஆனால் அது அமைந்துவிட்டது’ -வலிமை பற்றி ஹெச். வினோத் சிறப்பு பேட்டி!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: லண்டனுக்கு பறந்த டீம்.. சந்தோஷ் நாராயணன் கம்போஸிங்.. போட்டோ வைரல்!
அரிசி சாதத்திற்கு ஏங்கி கஷ்டப்பட்டவன் நான்.. ஜெய்பீம் விழாவில் சிவக்குமார் உருக்கம்..