Train Movie Pooja: விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு - 'திகில்' வெற்றி தருவாரா மிஷ்கின்?
கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
![Train Movie Pooja: விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு - 'திகில்' வெற்றி தருவாரா மிஷ்கின்? Vijay Sethupathi starrer Train movie pooja was held today Train Movie Pooja: விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு - 'திகில்' வெற்றி தருவாரா மிஷ்கின்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/01/cbb5304c9f2b326bf01094cb12ac1cb91701410472762571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார். தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ட்ரெயின் (Train) திரைப்பபடத்தை தயாரிக்கிறார்.
ட்ரெயின்:
இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே இத்திரைப்படத்திற்கு ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். மேலும் இப்படத்தில் டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கின்றனர். தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவில் இப்படம் உருவாகிறது.
பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு:
ட்ரெயின் (Train) படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு. முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் , கல்யாணம் (Knack Studios) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஜய் சேதுபதி திரையுலகில் கால் பதித்த ஆரம்ப காலக்கட்டத்திலேயே தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி மக்கள் மனத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் நடித்த பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஹூரோவாக மட்டும் அல்லாமல் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் மனம் கவர்ந்த வில்லனாகவும் மாஸ் காட்டினார் விஜய் சேதுபதி.
7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில், ஆக்சன் காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதியின் 51 படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் முழுமையாக அண்மையில் நிறைவடைந்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள ட்ரெயின் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க
India G20 Leadership: முடிந்தது ஜி20 தலைமை பொறுப்பு பதவிக்காலம் - ஓராண்டில் இந்தியா சாதித்தது என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)