மேலும் அறிய

Free Breakfast Scheme: முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றப்படுகிறதா?- சென்னை மாநகராட்சி விளக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றப்படுகிறதா என்று கேள்விகள் எழுந்த நிலையில், தனியாரிடம் ஒப்பந்தம் கோரப்பட்டது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சயப் பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதேபோல வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து காலை உணவுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவ்வாறே மாநிலம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவை மாநில அரசே வழங்கி வருகிறது.

சென்னை மாநகராட்சி தீர்மானம்

இதற்கிடையே சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு முன்பாகவே, தினசரி காலை நேரத்தில் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. மாநகராட்சிக்குச் சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் கடந்த 29ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றப்படுகிறதா என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி கூறி உள்ளதாவது:

முன்னோடி திட்டம்

’’பெருநகர சென்னை மாநகராட்சியில்,  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் முன்னோடி திட்டமாக 37 பள்ளிகளில் மாநகராட்சியின் சார்பில் காலை உணவு தயாரித்து  தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின்படி இதற்காக அமைக்கப்பட்ட உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 65030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர்அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒப்பந்தப் புள்ளி ஏதும் கோரப்படவில்லை

இந்நிலையில் இப்பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து  வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து  அதற்கான ஒப்புதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்’’.

இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்...
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Embed widget