மேலும் அறிய

உண்மைகளைத் திரித்து டைம்பாஸ் வேட்டைக்காரனைப் போல் சித்தரிப்பதா? ஷெர்னி நிஜ Hunter கண்டனம்..!

14 பேரைக் கொண்ற மேன் ஈட்டர் புலியை உயிருடனோ அல்லது சுட்டுக் கொன்றோ பிடிக்க வேண்டும் என்பது தான் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி. நாங்கள் நீண்ட போராட்டத்தை எதிகொண்டோம். அவ்னியை உயிருடன் பிடிக்க 12 முயற்சிகள் மேற்கொண்டோம். 12 முறையும் மயக்க ஊசியிலிருந்து அவ்னி லாவகமாக தப்பியது.

வித்தியாசமான கதைகளின் மட்டுமே நடிக்கும் நடிகை வித்யாபாலன் நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஷெர்னி. 

கடந்த 2018ல் மகாராஷ்டிராவில் 12 பேரைக் கொண்ட ஆட்கொல்லிப் புலி அவ்னி நீண்ட போராட்டத்துக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டது. அக்ஸர் அலி என்ற பிரபல துப்பாக்கிச் சுடும் வீரர் அவ்னி என்ற அந்தப் பெண் புல்லியை சுட்டுக் கொண்டார். இந்நிலையில், ஷெர்னி என்ற பெயரில் வெளியாகியுள்ள திரைப்படம் அவ்னி புலியின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தில் ஷேர்னியை கொலை செய்யும் வேட்டைக்காரர் பொழுதுபோக்குக்காக வனவிலங்குகளை வேட்டையாடுபவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து ஏற்கெனவே ஆட்சேபனை தெரிவித்து விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிய அக்ஸர் அலி, திரைப்படத் தயாரிப்புக் குழுவின் பதில் திருப்தியளிக்காததால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.

அவ்னி முன்கதை சுருக்கம்:
மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா எனும் காட்டுக்குள் தன் இரண்டு குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது அவ்னி எனும் பெண் புலி. கடந்த 2016 தொடங்கி 2 ஆண்டுகளில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 14 நபர்களை அவ்னி கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த 14 பேரில், இருவர் மட்டுமே புலியை எதிர்கொண்டு இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும்கூட அந்த இருவருமே, அவ்னியால்தான் மரணமடைந்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இந்நிலையில் 2018 ஆகஸ்ட் 2-ம் தேதி மகாராஷ்டிர அரசு அனுமதியுடன் அவ்னி கொல்லப்பட்டது. புலியைச் சுடும் அனுமதி ஷஃபத் அலி கான் என்பவருக்குத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்னியைக் கொன்றது அவரது மகன் அஸ்கர் அலி கான். இதிலும் விதிமுறை மீறல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவை ஒருபுறம் இருக்க, யவத்மால் வனப்பகுதியில் சிமென்ட் ஆலை அமைக்க தனியார் நிறுவனங்கள் சிலருக்கு வனத்துக்கு உட்பட்ட பகுதி தாரைவார்க்கப்பட்டதும், அங்கு ஆலை அமைப்பதற்காக புலிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அவ்னி பலி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்னி மரணம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்தான், அக்ஸர் அலி வழக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அக்ஸர் அலியின் வாதம்:

14 பேரைக் கொண்ற மேன் ஈட்டர் புலியை உயிருடனோ அல்லது சுட்டுக் கொன்றோ பிடிக்க வேண்டும் என்பது தான் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி. நாங்கள் நீண்ட போராட்டத்தை எதிர்கொண்டோம். அவ்னியை உயிருடன் பிடிக்க 12 முயற்சிகள் மேற்கொண்டோம். 12 முறையும் மயக்க ஊசியிலிருந்து அவ்னி லாவகமாக தப்பியது. கடைசியாக நாங்கள் ஜீப்பில் இருந்தபோது அவ்னி எங்களைத் தாக்க முயன்றது. அப்போது தற்காப்புக்காகவே அதை நாங்கள் சுட்டுக்கொல்ல வேண்டியதாயிற்று. ஆனால், ஷெர்னி படத்தில் நான் உட்பட என்னுடன் இருந்தவர்களையும் ஏதோ பொழுதுபோக்குக்காக வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களைப் போல் சித்தரித்துள்ளது. அவ்னி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது இப்படியொரு படத்தை எடுத்திருப்பது நீதிமன்ற அவமதிப்புக்குச் சமம்.

உண்மைகளைத் திரித்து  டைம்பாஸ் வேட்டைக்காரனைப் போல் சித்தரிப்பதா? ஷெர்னி நிஜ Hunter கண்டனம்..!
அவ்னி

எனது நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடட், படத்தில் அவ்னி நிஜக்கதையை தழுவி சில காட்சிகள் உள்ளன. பெண் அதிகாரியின் பாத்திரம் நிஜத்தில் இருந்த அதிகாரியை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்ஸர் அலி அவரின் தந்தையின் மாண்பை சிதைக்கும் காட்சிகள் இல்லை எனக் கூறியிருக்கிறது. படத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் அவ்னி கதையுடன் ஒத்துப்போனால் சரி என்று கூறலாம். அத்தனை நிகழ்வுகளுமே அப்படியே அவ்னி ப்ராஜெக்டில் நடந்ததாக இருக்கின்றன. இந்தப் படம் இவ்வழக்கின் விசாரணையை சிதைக்கும். இந்தப் படத்தில், ஊடக செய்திகளில் வெளியான குற்றச்சாட்டுகள் அத்தனையையும் என் மீதும் அப்பா மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் மிகப்பெரிய மேன் ஈட்டர் வேட்டையை நாங்கள் செய்துள்ளோன் ஆனால் எங்களைத் திட்டமிட்டு களங்கப்படுத்துகின்றனர் என அக்ஸர் அலி கூறுகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget