Tamannah : என் வாழ்க்கையில இப்போ எக்கச்சக்கமான அன்புங்க... தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பளிச்..
யூடியூப் சேனலில் Janice Sequeira உடனான உரையாடலில், விஜய் வர்மா தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஏன் இதுவரை வெளியில் பேசவில்லை என்பதைப் பற்றி பேசினார்.
நடிகை தமன்னா சமீபத்தில், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 -ஆம் பாகத்தில் தன்னோடு நடித்த நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதை உறுதிப்படுத்திய நிலையில், தற்போது நடிகர் விஜய் வர்மாவும் அதனை உறுதிபடுத்தி உள்ளார். தமன்னாவும் விஜய் வர்மாவும் தங்களின் வரவிருக்கும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலாஜியின்போது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இப்போது தனது வாழ்க்கையில் தனக்கு நிறைய அன்பு கிடைப்பதாக விஜய் கூறியுள்ளார்.
வாழ்வில் நிறைய அன்பு இருக்கு..
யூடியூப் சேனலில் Janice Sequeira உடனான உரையாடலில், விஜய் வர்மா தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஏன் இதுவரை வெளியில் பேசவில்லை என்பதைப் பற்றி பேசினார். "சரியான நேரம் வரும்போது நீங்கள் அதைப் பற்றி அறிவீர்கள், ஆனால் இப்போது என் வாழ்க்கையில் நிறைய அன்பும், காதலும் இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.
படப்பிடிப்பின்போது மலர்ந்த காதல்
பல மாத ஊகங்களுக்குப் பிறகு, தமன்னா சமீபத்தில்தான் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதை ஒப்புக்கொண்டார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2-இன் படப்பிடிப்பு தளத்தில் அவர்களது உறவு இயல்பாக மலர்ந்ததாக தமன்னா வெளிப்படுத்தினார். லஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம்தான் தமன்னாவும் விஜயும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் ஆகும்.
தமன்னா விளக்கம்
தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் உறவு குறித்த கிசுகிசுப்பு பல மாதங்களாக வைரல் செய்தியாக உள்ளன. ஃபிலிம் கம்பெனி உடனான சமீபத்திய நேர்காணலில், தமன்னா, "ஒருவர் உங்களது சக நடிகராக இருப்பதால் மட்டுமே, அவரை ஈர்க்க முடியும் அல்லது, அவரால் ஈர்கப்படலாம் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு எத்தனையோ சக நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் யாரிடமாவது காதலில் விழ வேண்டும் என்றால், கண்டிப்பாக இடையில் எதையாவது உணர்ந்தால் மட்டுமே முடியும். அது நிச்சயமாக மிகவும் தனிப்பட்ட விஷயம், அவர்கள் வாழ்க்கைக்காக என்ன தொழில் செய்கிறார்கள் என்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது நடக்கக் காரணம் ஒன்றாக நடிப்பது மட்டுமே அல்ல என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் 2
லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் அவருக்கும் விஜய்க்கும் அந்த உணர்வு ஏற்பட்டதா? என்று தமன்னாவிடம் கேட்டபோது, தமன்னா தங்கள் காதலை ஒப்புக்கொண்டு, "ஆம்" என்று கூறினார். விஜயை பற்றி விவரிக்கும்போது, ”அவர் நான் மிகவும் எதிர்பார்க்கும் ஒருவர்... நான் மிகவும் அக்கறை செலுத்தும் நபர், ஆம், அவர் எனக்கான மகிழ்ச்சியான இடம்" என்று கூறினார். இதற்கிடையில், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படம், பால்கி, கொங்கோனா சென் சர்மா, சுஜோய் கோஷ் மற்றும் அமித் ஷர்மா ஆகிய நான்கு இயக்குநர்கள் இயக்கிய நான்கு படங்களின் தொகுப்பாக உருவாகி உள்ளது. மேலும் மிருனால் தாக்கூர், விஜய் வர்மா, கஜோல், நீனா குப்தா மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது வரும் ஜுன் 29 -ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ்-இல் வெளியாகவுள்ளது.