Tamannaah Bhatia: வெப் சீரிஸில் கவர்ச்சி... ட்விட்டரை தெறிக்க விடும் தமன்னா.. ரசிகர்கள் கடும் விமர்சனம்..!
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை தமன்னா உச்சக்கட்ட கவர்ச்சியாக நடித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிகைதமன்னா உச்சக்கட்ட கவர்ச்சியாக நடித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜீ கர்தா (Jee Karda) தொடர்
அருணிமா ஷர்மா இயக்கியுள்ள ஜீ கர்தா (Jee Karda) என்னும் வெப் சீரிஸ் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. இந்தத் தொடரில் தமன்னா பாட்டியா , சுஹைல் நய்யார், ஆஷிம் குலாட்டி,ஹுசைன் தலால்,மல்ஹர் தாக்கர்,சிமோன் சிங் மற்றும் அன்யா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 8 எபிசோட்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வெப் சீரிஸ், சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் 7 பேரை சுற்றி நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
காதல், நட்பு, டேட்டிங் சிரமங்கள், ரகசிய உறவுகள், பிரிவுகள், தந்தையால் ஏற்படும் பிரச்சனைகள், உறவின் வரம்புகள், வர்க்க வேறுபாடுகள் உள்ளிட்ட பல விஷயங்களை பேசும் தொடராக அமைந்துள்ளது. இந்த தொடரில் நடிகை தமன்னா காதல் கனவோடு வாழும் லாவண்யா சிங் என்ற பெண்ணாக நடித்துள்ளார். இதில் நண்பர்கள் சுஹைல் நய்யார் மற்றும் ஆஷிம் குலாட்டியுடன் தமன்னா நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.
ஓடிடிக்கென்று தணிக்கை இல்லாத நிலையில் கவர்ச்சி காட்சிகளில் அவர் நடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் ட்விட்டரில் குவிந்து வருகிறது. பலரும் தமன்னாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபகாலமாக நடிகர், நடிகைகள் வெப் சீரிஸில் கவர்ச்சி காட்சிகளில் நடிக்கின்றனர். இது ஏற்கனவே சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், தமன்னாவும் இதுபோன்ற காட்சிகளில் நடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கஜோல், தமன்னா, விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், அம்ருதா சுபாஷ், மிருணாள் தாக்கூர், நீனா குப்தா, அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா என பலரும் நடித்திருந்த ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ வெப் சீரிஸின் டீசர் வெளியானது. பெண்களின் பாலியல் விருப்பங்களை அவர்கள் பார்வையிலிருந்து வெளிப்படையாக பேசும் இந்த ஆந்தாலஜி சீரிஸின் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது 2வது சீசன் உருவாகியுள்ளது.
இதிலும் நடிகை தமன்னா தொடர்பான காட்சிகள் கடும் விமர்சனங்களைப் பெற்றது. சினிமாவில் தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடித்த தமன்னா, அதன்பின்னர் அப்படியாக காட்சிகளில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனால் மீண்டும் இதுபோன்ற படங்களில் நடிப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க: Priya Bhavani Shankar: ‘அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லை’ - நடிகை பிரியா பவானி ஷங்கர் காட்டம்