Vijay meets MS Dhoni: மாஸ்டருடன் பிளாஸ்டர்.... தல-தளபதி சந்திப்பால் அதகளம் ஆகும் சோஷியல் மீடியா!
ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக சென்னை வந்திருக்கும் தோனியும், பீஸ்ட் பட ஷூட்டிங்கில் இருக்கும் விஜயும் சந்தித்துள்ளனர்.
சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற்று வந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜயும், கிரிக்கெட் வீரர் தோனியும் சந்தித்து கொண்ட புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.
#ThalapathyVijay (#Beast shooting) met #MSDhoni (an ad film shooting) at Gokulam Studios, Chennai some time back 👌👌
— Kaushik LM (@LMKMovieManiac) August 12, 2021
THE ICONS MEET!
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். இங்கு பயிற்சி மேற்கொண்ட பிறகு ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அணி வீரர்கள், போட்டி தொடங்குவதற்கு முன்பு அங்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். சென்னை வந்திருக்கும் தோனி, இப்போது விளம்பரப்பட ஷூட்டிங் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Dhoni in Chennai: நெருங்கும் ஐபிஎல்.. சென்னை வந்த தோனி..!
Lion Day Entry 🔥
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 10, 2021
📍Anbuden Chennai#ThalaDharisanam #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Ci2G4vBuEQ
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘ பீஸ்ட்’ இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. பீஸ்ட் படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக விஜய் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகின்றது.
பீஸ்ட் பட ஷூட்டிங்கும், விளம்பரப்பட ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடைபெற்று வருவதால், தல - தளபதி மீட்டிங் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது இந்த புகைப்படம்தான் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.