Sivakarthikeyan in Beast: பீஸ்ட் படத்தின் வேற லெவல் அப்டேட்! - விஜயுடன் கை கோர்க்கும் சிவகார்த்திகேயன் !
பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘ பீஸ்ட்’ இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. பீஸ்ட் படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக விஜய் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திக்கேயனும் இணைய இருப்பதாக படக்குழுவினருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றனர்,
பீஸ்ட் படத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கவில்லை மாறாக ஒரு பாடலை எழுதி அவரே பாட இருக்கிறாராம். இதற்கு முன்னதாக அனிருத் இசையில் நெல்சன் திலீப்குமார் இயக்கியத்தில் வெளியான , கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசுல பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட்டாகவும் மாறிப்போனது. இது தவிர டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய இரண்டு பாடல்களின் வரிகளையும் சிவகார்த்திக்கேயனே எழுதியு. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள டாக்டர் படத்தை நெல்சன் இயக்கியுள்ளனர் இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுத இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் ,கொரோனா இரண்டாம் அலை காரணமாக அடுத்தடுத்த படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்த அறிவிப்புகளை பின்பற்றி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் , மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் பகுதிகளில் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தின் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக படக்குழுவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷன் டிராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் குறிப்பிடத்தக்கது. படத்தில் ஒயிட் காலர் வில்லனாக செல்வராகவன் நடிப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இது குறித்த தெளிவான விவரங்கள் அடுத்தடுத்த அப்டேட் மூலமாகத்தான் தெரிய வரும் . இவரை தவிர பீஸ்ட் படத்தில் நடிகர்கள் விடிவி கணேஷ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோம், லிலிபுட் ஃபரூக்கி, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ச் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.