Pushpa 2: நாளை வெளியாகிறது புஷ்பா 2 படத்தின் முக்கிய அறிவிப்பு..! ராஷ்மிகாவுக்கு பர்த்டே பரிசா?
அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 8-ந் தேதி புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது.
புஷ்பா 2 ஃபர்ஸ்ட் லுக்:
இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. கோடை விடுமுறையாக திரைக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று அல்லு அர்ஜூன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் புஷ்பா படத்தின் கான்செப்ட் ரசிகர்கள் வரும் 7-ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புஷ்பா படத்தின் முதல் பார்வை எனப்படும் ஃபர்ஸ்ட் லுக் வரும் 8-ந் தேதி அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நாளை காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அல்லு அர்ஜூன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதுடன், டீசர் அல்லது ட்ரெயிலர் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பான் இந்தியா படம்:
புஷ்பா படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 2ம் பாகத்தில் வில்லனாக பன்வர்சிங் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஃபகத் பாசில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் பிரபல நடிகர் ஜெகபதி பாபுவும் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற ம்ம் சொல்றீயா.. ம்ம்ம் சொல்றீயா பாடலும், அந்த பாடலில் இடம்பெற்ற சமந்தாவின் நடனமும் படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது. முதல் பாகத்தை போலவே 2ம் பாகத்திலும் இந்தியா முழுவதும் சென்றடையும் விதத்தில் ஒரு குத்து பாடலை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அல்லு அர்ஜூன் பிறந்தநாள்:
கோடை விடுமுறை காலத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதாலும், குடும்பங்களின் எண்ணிக்கை அதிகளவில் வரும் என்பதாலும் புஷ்பா 2ம் பாகத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அல்லு அர்ஜூனின் பிறந்த நாளில் புஷ்பா 2ம் பாக ஃபர்ஸ்ட் லுக் மட்டுமின்றி பிற அறிவிப்பு ஏதாவது வெளியாகுமா? என்றும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
மேலும் படிக்க: 'சோளகர் தொட்டி’ நாவலின் காட்சிகள் விடுதலை திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது - எழுத்தாளர் ச.பாலமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
மேலும் படிக்க: Rockstar Ramaniammal : சாதனைகளுக்கு வயது தடையா? உணர்த்திய பாடகி.. ராக்ஸ்டார் ரமணியம்மாள் உயிரிழப்பு!