‛அனிருத் மாதிரி என்னை மாற சொல்கிறான் என் மகன்...’ இசையமைப்பாளர் ஸாம் சி.எஸ்., மனம் திறந்த பேட்டி!
Sam CS interview: எப்போதாவது, என் பயன் கேப்பான், ‛‛என்ன அப்பா நீங்க அனிருத் மாதிரி பாட மாட்றீங்கணு..’’
ராக்கெட்டிரி நம்பி விளைவு திரைப்படம் பலரால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதன் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்., பற்றிய பேச்சும் பரவலாக உள்ளது. கைதி, விக்ரம் வேதா, எனிமி என பல பேசப்பட்ட படங்களின் இசையமைப்பாளர். பின்னணிக்காக பேசப்படுவர். சமீபத்தில் ராக்கெட்ரி நம்பி விளைவு படத்திற்காக , இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த சாம் சிஎஸ், தன்னைப்பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார். இதோ அவரது பேட்டி...
‛‛காலைல சாப்பிட மாட்டேன். மெது வட, ஒரு டீ வழக்கமாக நார்மலான டீ கடைல சாப்பிடுவேன். ஜாலியா இருக்கு. மால் போன யாரும் கண்டுப்பிடிக்கமாட்டாங்க. என்ன நூரு பேர்ல ஒருதருக்குவேண , அவர் ஸாம்னு தெரியலாம். அந்த வாழ்க்கை நல்ல இருக்கு, நல்லாவும் புடிச்சு இருக்கு. ஆன எப்போதாவது, என் பயன் கேப்பான்”என்ன அப்பா நீங்க அனிருத் மாதிரி பாட மாட்றீங்கணு கேப்பான்”, ஏன்னா, அவனுக்கு அனிருத்னா ரொம்ப புடிக்கும். அதனால அனிருத் மாதிரி பாட சொல்லுவான். அவனுக்கு தெரியாது ,நம்ம பாடுற ஜானர் வேறனு. அப்போ அனிருத் மாதிரி நம்ம ஏன் மாறனும்னு யோசிப்பேன். நம்ம என் நம்பல ப்ரொமொட் பண்ணி முகத்த காமிக்கனும்னு யோசிப்பேன். இத குறிக்கோலாக எடுத்துக்கொள்ளக் கூடாதுனு கிடையாது.
உண்மைய சொல்லனும்னா நான் 2-3 வருசம் அப்புறம் தான் ப்ரஸ்ஸை சந்திக்கிறேன். ஏன்னா எனக்கு அவ்ளோ வேலை இருக்கு. நான் அதை கவனித்துக்கொள்கிறேன். பப் போவதில்லை, இந்த மாதிரி இரவு வாழ்க்கை எதுமே கிடையாது. நம்ம நைட்டு தூங்கி, காலையில 6 மணிக்கு எந்திருச்சு, திரும்பவும் வேலை. இப்படி தான் போது வாழ்க்கை . இதுல நம்ம, பெரிய படங்கள் பண்ணும்போது , ஆட்டொமெடிக்கா தெரியவரும். நம்மளாக போய் அதுக்காக ஆல்பம் பன்றதோ, இல்ல கேஸ்ல மாட்றதோ எதுக்கு தோணும்.
கண்டிப்ப சில பேர் வந்து, ஒரு சில பரிசு விழாக்களுக்கு என்னை கூப்பிடமாட்டாங்க. அப்போ நம்ம இன்னும் தரமான இசை குடுக்கனும் தோனும். எனக்கு எல்லாம் விதமான இசையும் புடிக்கும், பண்ணவும் முடியும். இசைக்குள் வந்த பிறகு, இளையராஜாவால் ஈர்க்கப்பட்டேன். அவர் அனைத்து ஜானரிலும் பாடல்கள் பண்ணதால் இவ்ளோ நாள் நிலைக்க முடிந்தது. அதே போல் ஒரு தனிப்பட்ட ஜானரில் இருக்க நான் விரும்பவில்லை.
நடிப்பு என்பது சாதாரணமான விஷயம் கிடையது. அது வேறொரு கலை. இன்னும் இதுலயே பெருசாக வரவில்லை, அதெல்லாம் வாய்பே இல்லை. பாடல்கள் புதுமையா எதிரிப்பார்க்கிறோம். ஆனால் படங்கள் அப்படி வருவதில்லை. எல்லாம் அதே காட்சிகள் தான். வேரு பாட்டோட சாயலை அதிகபட்சம் தவிர்போம். ராக்கெட்ரி ஒரு நிஜ வாழ்க்கை கதை, அதில் வியத்தகு இசை சரிவராது. அதில் உணர்ச்சிகளுக்கு ஏத்த இசை பயன்படுத்த வேண்டும். இவ்ளோ கஷ்ட்டப்பட்டு , எல்லாரிடமிருந்து நல்ல விமர்சனம் வரும்போது மிகவும் சந்தோஷமாகவுள்ளது.
Also Read | ஒரு சீனுக்கு மட்டும் 7 மாதங்கள்.. பிரபுதேவாவின் ’மை டியர் பூதம்’ படம் பத்தி இது தெரியுமா?
தினமும் ஒரே வேலையை செய்வதை தாண்டி, எந்த ஒரு அங்கீகாரம் இல்லை என்று தோன்றியுள்ளது. அப்போ முடிவு செய்தேன், ஸாம் சிஎஸ் என்று போட்டாலே அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போது என்ன பண்ணலாம் என்று யோசித்தபோது, தற்செயலாக தான் இசைக்குள் வந்தேன்,’’
இவ்வாறு அந்த பேட்டியில் இசையமைப்பாளர் ஸாம் சிஎஸ்., தெரிவித்திருந்தார்.