R J Balaji: "காதலில் டீன் ஏஜ் ஆகவே இருக்கிறோம்.. நன்றி மேல் நன்றி.." மனைவியை க்யூட்டாக வாழ்த்திய ஆர்.ஜே. பாலாஜி..!
தன் காதல் மனைவிக்கு ஆர்.ஜே.பாலாஜி உணர்வுப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.
ரேடியோ ஜாக்கியாக தன் கரியரைத் தொடங்கி, காமெடியன், கிரிக்கெட் காமென்டேடர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பன்முகக் கலைஞராக வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி.
ஆர்.ஜே.பாலாஜி:
ஆர்.ஜேவாக இவர் தொகுத்து வழங்கிய ஷோக்கள் ஹிட் அடிக்க இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தொடர்ந்து சினிமாவில் தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கவனமீர்த்தார்.
தனது நக்கல், நையாண்டித் தனத்தால் பல ரசிகர்களைப் பெற்ற ஆர்.ஜே பாலாஜி, எல்கேஜி எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி, அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கி கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார்.
மனைவிக்கு வாழ்த்து:
முன்னதாக வீட்ல விசேஷம் படத்தை இயக்கி நடித்திருந்த ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ரன் பேபி ரன் படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜி தன் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
2003 மற்றும் 2023ஆம் ஆண்டு என இருபது ஆண்டுகள் இடைவெளியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ஆர்.ஜே.பாலாஜி, “நாம் வெகுதூரம் வந்துவிட்டோம் என்று பெருமையாகச் சொல்லலாம், ஆனாலும் நம்பிக்கையின்றி காதலில் இருந்த அதே டீனேஜர்களாகவே நாம் இன்னும் இருப்பதாக நான் உணர்கிறேன்.
என்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, என்னை விட்டுக்கொடுக்காததற்கு நன்றி, எனக்கு இரண்டாவது/மூன்றாவது/76வது/473வது வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.
சிறந்த நண்பனாகவும், பைத்தியக்கார காதலியாகவும், கண்டிப்பான மனைவியாகவும், சூப்பர் அம்மாவாகவும் இருப்பதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆச்சு..” எனப் பதிவிட்டுள்ளார்.
தன் காதல் மனைவிக்கு ஆர்.ஜே.பாலாஜி உணர்வுப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்:
தன் 21ஆவது வயதிலேயே தன் காதல் மனைவி திவ்யாவைத் திருமணம் செய்து கொண்டார். தன் சிறு வயது தோழியான திவ்யாவிடம் கல்லூரி முடிக்கும்போது காதலை ஆர்.ஜே.பாலாஜி உணர்ந்த நிலையில், இருவரும் காதலிக்கத் தொடங்கி உள்ளனர். தொடர்ந்து இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில், பின்னர் இவர்களது பெற்றோர் இருவரையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தங்கள் குடும்பப் படங்களை திவ்யா தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.