10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; இந்திய ரயில்வேயில் 3 ஆயிரம் பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 15 வயதாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 24 வயது வரை இருக்கலாம். எனினும் சமூக அடிப்படையில் இதில் தளர்வுகள் உண்டு.

RRC Apprentice Notification 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு மையம் சார்பில், ஒர்க்ஷாப் மற்றும் டிவிஷன் பிரிவில் இந்திய ரயில்வேயில் 3 ஆயிரம் பழகுநர்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆர்வம் கொண்ட தேர்வர்கள், rrcer.org என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
என்ன தகுதி?
விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 15 வயதாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 24 வயது வரை இருக்கலாம். எனினும் சமூக அடிப்படையில் இதில் தளர்வுகள் உண்டு.
குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களோடு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
ரூ.100 எனினும் எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி/ பெண் தேர்வர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு முறை எப்படி?
இதில் தேர்வாக, எழுத்துத் தேர்வு எதுவும் அடிப்படைத் தகுதியில்லை.10ஆம் வகுப்பு மற்றும் ஐஐடி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
கூடுதல் விவரங்களுக்கு: https://rrcer.org/Notification%20for%20Engagement%20of%20Act%20Apprentices%20for%20Training%20Slot%20in%20Eastern%20Railway%20Units,%20Notice%20No.%20RRCERAct%20Apprentices%202025-26.pdf
இணைய தள முகவரி: https://rrcer.org/






















