சிரிப்பால் மகிழவைத்த கலைஞர்....நடிகர் மதன் பாப் காலமானார்
Actor Madhan Bob Passed Away : நகைச்சுவை நடிகர் மதன் பாப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று மாலை சென்னை அடையாறில் காலமானார்

மதன் பாப் காலமானார்
நகைச்சுவை நடிகர் மதன் பாப் இன்று சென்னை அடையாறில் தனது இல்லத்தில் உடல் நல குறைவால் காலமானார். திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான மதன் பாப் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மதன் பாபின் இயற்ப்பெயர் கிருஷ்ண மூர்த்தி. இவருக்கு சுஷிலா என்கிற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் . புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிட்டதட்ட 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மதன் பாப். மதன் பாப் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவரது சிரிப்புதான். நடிப்பு தவிர்த்து சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்குபெற்றார்.





















