Nithya Menen: ‛இளைஞரின் 6 ஆண்டு டார்ச்சர்...’ 30 நம்பர்கள் பிளாக்.. பகீர் கிளப்பிய நித்யா மேனன்!
சந்தோஷ் வர்க்கியை நித்யா மேனன் திருமணம் செய்யப் போவதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சந்தோஷ் வர்க்கியை நித்யா மேனன் திருமணம் செய்யப் போவதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் படங்களை விமர்சனம் செய்து வந்த சந்தோஷ் வர்க்கி என்பவர் ஆராட்டு சினிமாவை பாராட்டி பேசியதின் மூலம் வைரல் ஆனார். இந்த நிலையில் இவர் நடிகை நித்யாமேனனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.
View this post on Instagram
இது குறித்து விஜய்சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த 19 (1) (a) படத்தின் நேர்காணலில் நித்யா மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ அவர் சொல்வதை நம்பினால் நீங்கள் முட்டாள். என்னை அவர் பல வருடங்களாக மிகவும் சிரமப்படுத்திவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக என்னை தொடர்ந்து துன்புறுத்தினார். என்னிடம் பல பேர் அவர் மீது புகார் கொடுக்கச் சொன்னார்கள். ஆனால் நான் அவரை மன்னித்துவிட்டேன்.
தாய் தந்தையருக்கும் தொந்தரவு
அவர் எனது தாய் தந்தையரையும் போன் செய்து தொந்தரவு செய்தார். எனது அம்மா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போதும் அவர் போன் செய்து தொந்தரவு செய்திருக்கிறார். பல்வேறு மொபைல் எண்களில் இருந்து அவரிடம் போன் வந்து கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட அவர் பேசிய 30 போன் நம்பர்களை நான் பிளாக் செய்திருக்கிறேன். என்னை தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் பலரையும் அவர் தொடர்பு கொண்டார்” என்று பேசினார்.
View this post on Instagram
இதற்கு பதிலளித்துள்ளசந்தோஷ் வர்க்கி, “ 2009 ஆம் ஆண்டுதான் நித்யா மேனனிடம் அறிமுகமானேன். அவருடன் 2021 ஆம் ஆண்டு வரை பழகினேன். அவருடைய அம்மா அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக சொன்னார். ஆனால் அவர் அப்பாவோ நித்யா யாரையும் விரும்பவில்லை என்று சொன்னார்.
இது முன்னமே தெர்ந்திருந்தால் நான் அவரை காதலித்திருக்க மாட்டேன். 30 க்கும் மேற்பட்ட நம்பர்களில் இருந்து அழைத்ததாக சொல்கிறார். இந்திய சட்டப்படி ஒருவருக்கு எத்தனை சிம் கார்டு கிடைக்கும் என்பது மக்களுக்கு தெரியும். என் மீது பாலியல் வழக்கு தொடர முயற்சி செய்தார்கள். எனது தந்தையின் மறைவுக்கு பிறகு நான் உண்டு எனது வேலை உண்டு என்று இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று பேசியிருக்கிறார்.