மேலும் அறிய

Praveen Kumar : மேதகு படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

மேதகு படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணமடைந்துள்ள தகவல் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இசையமைப்பாளர் பிரவீன் குமார்

2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து கவனமீர்த்தவர் பிரவீன் குமார். மேதகு படம் தவிர்த்து இரக்கதன் என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார். பிரவீன் குமாரின் இசையில் ஒரு தனித்துவம் இருப்பதாகவும் தமிழ் சினிமாவில் அவர் பெரிய இடத்திற்கு செல்வார் என்று அவரை பாராட்டியுள்ளார்கள். தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களுக்கு இசையமைத்து அவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுவான் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவரது மரணம் குறித்த அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக  பிரவீன் குமாரின் உடல் நலம்  மோசமடைந்திருந்ததாகவும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் பிரவீன் குமார். இதனை தொடர்ந்து நேற்று மே 1 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மே 2-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரவீன் குமாரின் உடல் நிலை குறித்த பிற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளை சுமந்திருந்த அந்த பிரவீன் குமாரின் வயது வெறும் 28.  அவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். 

ஒரே நாளில் இரண்டு இசைக் கலைஞர்களின் மரணத் தகவல் தமிழ் இசைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த பின்னணி பாடகி உமா ரமணன் மே 1 ஆம் தேதி இரவு உடல் நலக் குறைவால் மரணமடைந்த தகவல் முதல் அனைவரையும் உலுக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு இளம் இசையமைப்பாளரின் மரணம் அடுத்தடுத்த அதிச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.  பிரவீன் குமாரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் வடக்குவாசலில் அவரது இல்லத்தில் இருந்து இன்று மே 2 ஆம் தேதி மாலை 6 மணியளவில் புறப்பட இருக்கிறது. இசையமைப்பாளர் பிரவீன் குமார் மேதகு படத்தில் தனது இசைக்காக என்று மக்களால் நினைவுகூறப்படுவார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Leopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்Vikravandi By Election | அன்புமணி வசமான பாமக! விக்கிரவாண்டியில் போட்டி! தைலாபுரம் EXCLUSIVE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
Breaking News LIVE: உக்ரைன் போர்! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் -  வனத்துறை எச்சரிக்கை
சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை
NEET UG 2024 Result: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
NEET UG 2024 Result: கருணை மதிப்பெண் விவகாரம்; மாறும் நீட் தேர்வு முடிவுகள்? 23 பேர் மட்டுமே முழு மதிப்பெண்?
Embed widget