எப்படியாவது காப்பாத்துங்க! தென் மாவட்ட மக்களுக்காக தமிழக அரசை வலியுறுத்தும் மாரி செல்வராஜ்!
தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது.
![எப்படியாவது காப்பாத்துங்க! தென் மாவட்ட மக்களுக்காக தமிழக அரசை வலியுறுத்தும் மாரி செல்வராஜ்! mari selvaraj tweet about tirunelveli thuthukudi rain flood update எப்படியாவது காப்பாத்துங்க! தென் மாவட்ட மக்களுக்காக தமிழக அரசை வலியுறுத்தும் மாரி செல்வராஜ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/fa9555ccb0a19a5e9c4375a68117ae2b1702903555628333_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எதன்வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது.
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை…
— Mari Selvaraj (@mari_selvaraj) December 18, 2023
ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து நெல்லை வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தொடர்ந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சர் உதயநிதி உதவிகளை வழங்கினார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில்,
நெல்லையில் மிக கனமழை பெய்த காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொறுப்பு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3500 பேர் நேற்று காலை முதல் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளோம் சில இடங்களில் மழை அதிகமாக பெய்தது சிலர் வீடுகளிலே இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கும் சாப்பாடு கொடுப்பதற்கு படகு வசதி ஏற்பாடு செய்துள்ளோம்.
என்னையும் சக அமைச்சர்களையும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் இங்கு அனுப்பியுள்ளார். நாங்கள் மீட்பு பணியில் தயார் நிலையில் இருக்கிறோம். நேற்றை விட இன்று மழை குறைந்துள்ளது. தண்ணீரும் வடிய தொடங்கியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை சந்திப்பு, சிந்துப்பூந்துறை பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அளவுக்கு அதிகமாக படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 36 கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் மழை வெள்ளத்தால் நெல்லையில் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்கள் உடைந்திருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் முடிந்தவரை வெளியே வரவேண்டும். நெல்லையில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று விட்டது. அடுத்த கட்டமாக கான்கிரீட் போடும் பணிகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. கால்வாயில் தற்போது பிரச்சனை இல்லை. முதல்வர் நாளை டெல்லிக்கு சென்று பிரதமரிடம் நிவாரணம் கேட்க உள்ளார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த மாவட்டத்திற்கு தேவையான நிவாரணத்தையும் முதல்வர் அறிவிப்பார். பொதுமக்களுக்கு பால் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து அறிவுறுத்தியுளளோம். பத்தாயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)