மேலும் அறிய

Khushbhu Daughter: உண்மையான குட்டி குஷ்பூ ரெடி... விரைவில் சினிமாவில் அறிமுகமாகும் குஷ்பூ மகள்? வெளியான க்யூட் போட்டோஸ்   

நடிகை குஷ்பூ - சுந்தர்.சி மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதற்காக அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

90'ஸ் களில் கொடி கட்டி பறந்த நடிகைக்கு கோயில் கட்டி ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை குஷ்பூ. லட்சக்கணக்கான ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவராக இருந்த குஷ்பூ தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் தவிர்க்க முடியாத ஒரு ஸ்டார் நடிகையாக வலம் வந்தார். வெள்ளித்திரையில் ஒரு நடிகையாக, தயாரிப்பாளராக மட்டுமின்றி சின்னத்திரையிலும் ஒரு நடிகையாக, ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக தன்னை நிலைநிறுத்தி கொண்டவர். 

Khushbhu Daughter: உண்மையான குட்டி குஷ்பூ ரெடி... விரைவில் சினிமாவில் அறிமுகமாகும் குஷ்பூ மகள்? வெளியான க்யூட் போட்டோஸ்   

குஷ்பூ திரை வாழ்க்கையில் மட்டுமின்றி அரசியலிலும் தைரியமாக செயல்பட்டு பட்டையை கிளப்பி வருகிறார். அதே சமயத்தில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் குஷ்பூ. சமீப காலமாக குஷ்பூ உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கில் சர்பரைஸ் கொடுத்தார்.  

90களில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் இணைந்து டூயட் பாடிய குஷ்பூ இயக்குநர் சுந்தர்.சியை 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். டீனேஜ் வயதை எட்டிய மகள்கள் இருவரும் அப்பா அம்மாவை போலவே தயாரிப்பில் ஒருவரும் நடிப்பில் ஒருவரும் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் குஷ்பூ - சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகா நடிப்பதில் கவனம் செலுத்த விரும்பும் அவந்திகா போட்டோஷூட் ஒன்றுக்கு அழகாக போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக மாடர்ன் உடையில் கலக்கும் அவந்திகா தற்போது ட்ரடிஷனல் லுக்கில் புடவையில் கம்பீரமான தோற்றத்தில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குஷ்பூவின் மகளா இது? ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இப்படி மாறிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  

 

Khushbhu Daughter: உண்மையான குட்டி குஷ்பூ ரெடி... விரைவில் சினிமாவில் அறிமுகமாகும் குஷ்பூ மகள்? வெளியான க்யூட் போட்டோஸ்   

மகள் அவந்திகாவின் புகைப்படங்களை நடிகை குஷ்பூவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து 'எனது இளவரசி' என கேப்ஷன் வைத்துள்ளார். தற்போது அவந்திகாவின் கியூட் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நடிக்க விருப்பம் இருப்பதால் அதற்கு தேவையான அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அவந்திகா. மிகவும் குண்டாக இருந்த அவந்திகா தற்போது தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்றும் தமிழ் சினிமாவிற்கு குட்டி குஷ்பூ தயாராகி விட்டதாகவும் கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறார்கள் ஆல் டைம் ஃபேவரட் குஷ்பூவின் ரசிகர்கள். நிச்சயம் அவரொரு திரை வாரிசு என்பதை தனது நடிப்பின் மூலம் நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Lok Sabha Election 2024 LIVE: ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு
Lok Sabha Election 2024 LIVE: ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Lok Sabha Election 2024 LIVE: ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு
Lok Sabha Election 2024 LIVE: ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Mysskin: “கோயிலுக்கு போறீங்க.. ஆனால் தியேட்டருக்கு வரமாட்டேங்குறீங்க” - இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்
“கோயிலுக்கு போறீங்க.. ஆனால் தியேட்டருக்கு வரமாட்டேங்குறீங்க” - இயக்குநர் மிஷ்கின் ஆதங்கம்
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
Embed widget