இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூரைச் சேர்ந்தவர் விமல்ராஜ். வயது 19.
இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவியின் வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூரைச் சேர்ந்தவர் விமல்ராஜ். வயது 19. இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி உள்ளனர். நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் தங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்து பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவு எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து விமல்ராஜ் மாணவியை பார்க்க தேனியில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அப்போது மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைபயன்படுத்தி கொள்ள நினைத்த விமல்ராஜ் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பயந்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கி பிரம்மதேசம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசாரிடம் மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.