டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
மே 19, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதிவரை சுமார் 98.2 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் ரூ.6,691 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் வங்கிகளுக்கு வராமல் மக்களின் புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 19, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது சுமார் ரூ.3.56 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மக்களிடம் புழக்கத்தில் இருந்ததாகவும் மே 31, 2024 அன்று வெறும் ரூ.6,691 கோடியாக குறைந்துள்ளது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவீதம், வங்கிக்கு திரும்ப வந்துவிட்டன" என்று தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் மற்றும் மாற்றும் வசதி வசதி அக்டோபர் 7, 2023 வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் இருந்தது. இருப்பினும், இந்த வசதி ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களிலும் இன்னும் கிடைக்கிறது. அக்டோபர் 9, 2023 முதல், ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வதற்காக ஏற்றுக்கொள்கின்றன.
2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றிக்கொள்ளும் வசதி 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உள்ளன. அதாவது, அகமதாபாத், பெங்களூரு, பெலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ளன.
அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 2016 இல் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.