மேலும் அறிய

Nithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

பீகார் முதலமைச்சர் மீண்டும் கூட்டணி மாற ரெடியாகிவிட்டதாக பரபரப்பு பேச்சு அடிபடுகிறது. ”நாங்க சொல்றத தான் முடிவு” என முக்கிய விவகாரம் ஒன்றில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது ஜனதா தளம்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூட்டணி தாவிக் கொண்டே இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே விமர்சனம் இருந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணிக்கு தாவிய நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சியமைப்பதில் கிங் மேக்கராக மாறினார் நிதிஷ் குமார்.

பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தற்போதே அதிகார மோதல் ஆரம்பமாகிவிட்டது. பீகாரில் பாஜக கூட்டணியின் முகம் யார் என்பதில் போட்டா போட்டி நடந்து வருகிறது. தற்போது மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 84 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 48 எம்எல்ஏக்களும் உள்ளனர். அதிக இடங்களை வைத்திருந்தும் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்ததால் பாஜகவினர் அதிருப்தியில் இருந்தனர். அதனால் இந்த முறை பாஜகவுக்கு தான் முதலமைச்சர் பதவி வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். மற்றொரு பக்கம் நிதிஷ் குமார் தலைமையில் தான் ஆட்சியமையும், அதில் எந்த மாற்றமும் இல்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் விடாப்பிடியாக இருக்கின்றனர்.

மகாராஷ்டிராவிலும் கூட்டணிக்கு வந்த போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு, தற்போது நடந்த தேர்தலில் அந்த பதவியை தனது வசமாக்கியது பாஜக. அதே ஃபார்முலாவை பீகாரிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாஜவினர் முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தால் கூட்டணி மாறுவதற்கும் நிதிஷ் குமார் தயாராக இருப்பதாக சொல்கின்றனர். அதனால் கூட்டணி கணக்குகளை மனதில் வைத்தும் பாஜக முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. நிதிஷ் குமார் அவ்வப்போது அணி மாறுவதை வழக்கமாக வைத்திருப்பதால் மீண்டும் கூட்டணி மாறி விடுவாரோ என்ற பயம் பாஜகவுக்கு இருக்கிறது.

ஆனாலும் பீகார் பாஜகவினரும் நொந்து போகாத அளவுக்கு முடிவெடுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த பாய் பிரேந்திரா, நிதிஷ் குமார் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என சொல்லி பாஜகவினருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

'தென்னிந்திய கும்பமேளா'வுக்கு இப்படியொரு நிலையா? வறண்ட காவிரியில் போர்வெல் நீரில் குளித்த அவலம்!
'தென்னிந்திய கும்பமேளா'வுக்கு இப்படியொரு நிலையா? வறண்ட காவிரியில் போர்வெல் நீரில் குளித்த அவலம்!
coimbatore power cut: கோவையில் நாளை (17-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (17-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் தாக்குதல்! பயிர்களைக் காக்க விவசாயிகள் என்ன செய்யணும்?
நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் தாக்குதல்! பயிர்களைக் காக்க விவசாயிகள் என்ன செய்யணும்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
Aadhav Arjuna: 14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
MK Stalin: ”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
TN Govt: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
Embed widget