மேலும் அறிய

Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?

Chennai Flower Show: சென்னையில் இன்று தொடங்கும் மலர் கண்காட்சிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நுழைவுக் கட்டணம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Flower Show: சென்னை மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை மலர் கண்காட்சி

தமிழ்நாட்டில் பிரபல சுற்றுலா தளமான ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மலர் கண்காட்சி மிகவும் பிரபலமானது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதனை கண்டுகளிக்கின்றனர். இந்நிலையில் சென்னை மக்களும் எளிதில் மலர் கண்காட்சியை கண்டுகளிக்க நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டது. அதன்படி, தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை சார்பில்  கடந்த 2022ம் ஆண்டு முதல்   சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு நடைபெற உள்ள நான்காவது மலர் கண்காட்சி, இன்று தொடங்கி வரும் 11ம் தேதி வரை என, 10 நாட்கள் நடைபெற உள்ளது.

30 லட்சம் மலர் தொட்டிகள்

மலர் கண்காட்சிக்காக ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. 50 வகையான மலர்களுடைய 30 லட்ச மலர் தொட்டிகள் கண்காட்சிக்காக வைக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலர்களை கொண்டு யானை, மயில், ரயில், ஆமை, படகு, வண்ணத்துப்பூச்சி, அன்னப்பறவை, நடனமங்கை என 20 வகையான வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காலை 10 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

இவ்வளவு கட்டணமா?

இன்று தொடங்கி வரும் 11ம் தேதி வரை நடைபெற உள்ள மலர் கண்காட்சியில், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான கட்டண நிர்ணயம் தான் தற்போது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற மலர் கண்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 3 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

யார் வருவாங்க?

முதல் முறையாக நடைபெற்ற மலர் கண்காட்சியை பார்வையிட 44 ஆயிரத்து 888 பேர் குவிந்தனர். இரண்டாவது மலர் கண்காட்சியை பார்வையிட  23 ஆயிரத்து 302 பேர் மட்டுமே வந்தனர். ஆனால், கடந்த முறை கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற மலர் கண்காட்சியை 1 லட்சத்து 9 ஆயிரத்து 27 பேர் பார்வையிட்டனர். குறைந்த நுழைவு கட்டணமும் அதிகப்படியான மக்கள் குவிய காரணமாகும். ஆனால், இந்த முறை அதிகப்படியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே, செம்மொழிப் பூங்காவிற்கு எதிராக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான, நுழைவுக் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், சாதாரண மக்கள் குடும்பமாக அங்கு செல்லவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில், மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணம் நிர்ணயித்தால் அங்கு சராசரி மக்கள் யார் வருவார்கள்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். கட்டணத்தை குறைத்தால் பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசிப்பார்கள் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget