மேலும் அறிய
Advertisement
Kiliye Kiliye: கிளியே கிளியே.. 40 ஆண்டுகள் கடந்தும் கொண்டாடும் ரசிகர்கள்.. நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் நெகிழ்ச்சி!
செல்போன் அழைப்பின் இசையாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களாகவும் ரசித்து வரும் கிளியே கிளியே பாடல் குறித்து பூர்ணிமா பாக்கியராஜ் பேசியுள்ளார்.
Kiliye Kiliye song: கிளியே கிளியே மணி மணி மேகத்தோப்பில்... பாடல் 40 ஆண்டுகளுக்கு பிறகு வைரலாவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பழைய பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அதுவும் இளையராஜா இசையில் ஹிட் அடித்த பாடல்களுக்கு ரீல்ஸ் போடுவது ரசிகர்களின் முதன்மைத் தேர்வாக உள்ளது.
அந்த வகையில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் 30 ஆண்டுகளுக்கு பிறகு டிரெண்டானது. கமல்ஹாசன், குஷ்பு நடனமாடியுள்ள இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் பாடலுக்கு இளைஞர்கள் ரீல்ஸ் போட்டு தொடர்ந்து டிரெண்டிங்கில் வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது மலையாளப் பாடலான ‘கிளியே கிளியே’ டிரெண்டாக்கி வருகிறது.
ஜோஷி இயக்கிய ஆ ராத்திரி படம் 1983ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகை ரோகிணி, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் குழந்தை நட்சத்திரமாக அஞ்சு நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ’கிளியே கிளியே ’ பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தையை கொஞ்சும் விதமாக எடுக்கப்பட்ட இப்பாடல் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், செல்போன் அழைப்பின் இசையாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் சென்சேஷனாக மாறியுள்ள கிளியே கிளியே பாடல் குறித்து பூர்ணிமா பாக்கியராஜ் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், படத்தில் பிக்னிக் போகும் காட்சியின் போது கிளியே கிளியே பாடல் வரும் என்றும், குழந்தையாக இருந்த அஞ்சுவை தானும், ரோகிணியும் போட்டிபோட்டு கொஞ்சி பாடலை ஒளிப்பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், பாடல் காட்சிகளில் இருப்பது போன்ற சந்தோஷத்தில் தான் படப்பிடிப்பின் போதும் இருந்ததாக கூறியுள்ள பூர்ணிமா பாக்கியராஜ், 40 ஆண்டுகளுக்கு பிறகு கிளியே கிளியே பாடல் இன்னும் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார்.
இளையராஜா இசையமைத்துள்ள இந்த பாடலை ஜானகி பாடியுள்ளார். எப்பொழுதுமே இளையராஜாவின் பாட்டுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவரின் இசையில் இடம்பெற்றிருந்த சில பாடல்கள் என்றென்றும் எவர்கிரீன் பாடலாக கொண்டாடப்படுபவை. அந்த வகையில் கிளியே கிளியே பாடலும் தற்போது மலையாள ரசிகர்களை தாண்டி இந்திய அளவில் ட்ரெண்டாகி மொழி கடந்து ரசிகர்களை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க: Tiger 3 Box Office : கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் கலெக்ஷன்...டைகர் 3 படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆபீஸ்..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion