Kangana Ranaut Bungalow: நடிகை கங்கனா ரனாவத்தின் மும்பை வீடு.. விலைக்கு வாங்கிய தமிழ்நாட்டு பெண்! எத்தனை கோடி தெரியுமா?
நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் ரூ. 20 கோடிக்கு வாங்கிய வீட்டை ரூ.32 கோடிக்கு இப்போது விற்பனை செய்துள்ளார்.
![Kangana Ranaut Bungalow: நடிகை கங்கனா ரனாவத்தின் மும்பை வீடு.. விலைக்கு வாங்கிய தமிழ்நாட்டு பெண்! எத்தனை கோடி தெரியுமா? Kangana Ranaut sells Mumbai Pali Hill bungalow Rs 32 crore Buyer Shweta Bathija Coimbatore Kangana Ranaut Bungalow: நடிகை கங்கனா ரனாவத்தின் மும்பை வீடு.. விலைக்கு வாங்கிய தமிழ்நாட்டு பெண்! எத்தனை கோடி தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/10/3a8ad3543fb6cf1de9e76a023cf22a9f1725949659251572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் ரூ. 20 கோடிக்கு வாங்கிய வீட்டை ரூ.32 கோடிக்கு இப்போது விற்பனை செய்துள்ளார்.
மூன்று மாடிகள் கொண்ட கங்கனா ரனாவத் வீடு:
பாலிவுட் பிரபலங்கள் அதிகள அளவில் வசிக்கும் பகுதிகளில் முக்கியமான ஒன்று மும்பை பாந்த்ரா. அதிலும் குறிப்பாக ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும் இங்கே வசிக்கின்றனர். இந்த பாந்த்ரா பாலிஹில் பகுதியில் உள்ள நர்கீஸ் தத் சாலையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒரு பங்களா வீடு இருந்தது.
மூன்று மாடிகள் கொண்ட அந்த வீட்டை கங்கனா 2017ம் ஆண்டு ரூ.20 கோடிக்கு வாங்கினார். அதில் கீழ் தளம் மற்றும் இரண்டாவது மாடியில் கங்கனா ரனாவத் சில மாற்றங்களை செய்து அதனை தனது வீடு மற்றும் அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். 2020ம் ஆண்டு கங்கனா சட்டவிரோதமாக வீட்டில் மாற்றங்கள் செய்து இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸ் அனுப்பியதோடு புல்டோசருடன் வந்த மாநகராட்சி ஊழியர்கள் மாற்றியமைக்கப்பட்ட பகுதியை இடித்தனர். மா நகராட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் கங்கனா ரனாவத். அதோடு மும்பை மாநகராட்சி நிர்வகம் மற்றும் காவல் துறையினரையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விமர்சனம் செய்து இருந்தார்.
ரூ.32 கோடிக்கு வாங்கிய தமிழ் நாட்டு பெண்:
இச்சூழலில் தான் சர்ச்சைக்குள்ளான 3,075 சதுர அடி மற்றும் 565 சதுர அடியில் பார்க்கிங் இடம் கொண்ட அந்த வீட்டை கங்கனா ரனாவத் விற்பனை செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் பதிவு செப்டம்பர் 5 ஆம் தேதி நடந்திருக்கிறது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணம் ரூ.1.92 கோடி மற்றும் பதிவு கட்டணமாக ரூ.30 ஆயிரம் செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வீட்டை தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் வசிக்கும் கமலினி ஹோல்டிங்ஸின் பங்குதாரரான ஸ்வேதா பதிஜா 32 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)