Entertainment Headlines June 01: மொய்தீன் பாயாக லைக்ஸ் அள்ளும் ரஜினி... மாமன்னன் இசை வெளியீட்டு விழா... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏ.பி.பி. நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
கெத்தான ‘மொய்தீன் பாய்' கெட் அப்.. லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் சிங்க நடைபோட்ட ரஜினிகாந்த்!
‘லால் சலாம்’ ஷூட்டிங் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று ஸ்டைலாக நடைபோடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினியின் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி AFT ஆலையில் நடைபெற்று வரும் நிலையில், அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க
மணக்கோலத்தில் ’விஜய் டிவி’ தீனா .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்... குவியும் வாழ்த்து..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனாவுக்கு திருமணம் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனா சினிமா அல்லது தொலைக்காட்சியில் எப்படியாவது பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை கிளம்பி வந்தவர். ஆரம்ப காலக்கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் படிக்க
சினிமாவிற்கு டாட்டா சொன்ன உதயநிதி.. அவரின் திரைப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் இதோ..!
தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தின் வாரிசாக இருப்பினும் மிகவும் எளிமையான ஒரு மனிதராக மக்கள் மத்தியில் ஒளிரும் ஒரு கழகத் தலைவன் உதயநிதி ஸ்டாலின். இப்படி பட்ட ஒரு பின்புலம் இருப்பினும் அரசியல் என்ற வட்டத்திற்குள் நுழையாமல் தமிழ் மக்கள் மத்தியில் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் என்ற பேனரின் கீழ் தயாரிப்பாளராக பிரபலமானார். மேலும் படிக்க
அலைபாயுதே முதல் ராக்கெட்ரி வரை.. சாக்லேட் ஸ்நேகிதன் மாதவனுக்கு இன்று பிறந்தநாள்..!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் வாழ்ந்து வந்த ஒரு தமிழ் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் மாதவன்(Madhavan). இந்தி மற்றும் தமிழில் சரளமாக பேசக்கூடியவராக இருந்ததால் இந்தி தொலைக்காட்சி தொடரில் மிகவும் பிரபலமான நடிகராக நடித்து வந்தார். சந்தோஷ் சிவனின் சாண்டல் வுட் டால்க் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் 'இருவர்' படத்திற்கு ஆடிஷன் செய்ய அழைப்பு வந்துள்ளது. அந்த சமயத்தில் இயக்குனர் மணிரத்தினம் இவர் அந்த கதாபாத்திரத்துக்கு செட்டாக மாட்டார் என அனுப்பியவரை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவரே அழைத்து கொடுத்த வாய்ப்பு தான் 'அலைபாயுதே'. மேலும் படிக்க
நுழைவுவரி செலுத்தாத விவகாரம்.. ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை..!
நுழைவுவரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இறக்குமதி செய்த வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவுவரி, அபராதம் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ரூ. 11.50 லட்சம் நுழைவு வரி, அபராதம் செலுத்தக் கோரியதை எதிர்த்து ஹாரிஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மேலும் படிக்க