Harris Jayaraj: நுழைவுவரி செலுத்தாத விவகாரம்.. ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை..!
நுழைவுவரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
நுழைவுவரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இறக்குமதி செய்த வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவுவரி, அபராதம் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ரூ. 11.50 லட்சம் நுழைவு வரி, அபராதம் செலுத்தக் கோரியதை எதிர்த்து ஹாரிஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
வழக்கு விவரம்:
இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அபராத நோட்டஸூக்கு தடை விதிக்க கோரி ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கடந்த 2010ம் ஆண்டு இறக்குமதி செய்த ’மசராட்டி’ எனும் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் அபராதம் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ரூ.11,50,000,952 நுழைவு வரி, அபராதம் செலுத்துமாறு ஹாரிஸ் ஜெயராஜுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, நுழைவு வரி செலுத்தி விட்ட நிலையில், தமக்கு மட்டும் அபராதமும் விதித்தது அரசியல் சட்டத்தின் சமத்துவ உரிமைக்கு எதிரானது என ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் வாதம் செய்தனர்.