மேலும் அறிய

Rajinikanth Lal Salaam: கெத்தான ‘மொய்தீன் பாய்' கெட் அப்.. லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் சிங்க நடைபோட்ட ரஜினிகாந்த்!

‘லால் சலாம்’ ஷூட்டிங் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘லால் சலாம்’ ஷூட்டிங் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று ஸ்டைலாக நடைபோடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினியின் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி AFT ஆலையில் நடைபெற்று வரும் நிலையில், அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தனுஷ் நடித்த ’3’ திரைப்படம், கௌதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம், ‘லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ பாத்திரத்தில் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர். 80களின் பிரபல நடிகை ஜீவிதா இப்படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசை அமைக்கிறார்.

லைகா இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முன்னதாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இந்த நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி AFT ஆலையில் நடைபெற்று வருகிறது.

 

இச்சூழலில் நடிகர் ரஜினிகாந்த் இப்படத்துக்கான ‘மொய்தீன் பாய்’ கெட் அப்பில் லால் சலாம் பட் கெட் அப்பில் ரஜினிகாந்த் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் கெட் அப்புடன் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கடும் ட்ரோல்களை சந்தித்தது.

இஸ்லாமியர் தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் தொப்பி அணிந்து இருப்பது போலவும், அவருக்கு பின்னணியில் கலவரம் வெடித்தது போன்ற காட்சியும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.  இந்நிலையில்,  தொப்பி வாப்பா பிரியாணி புகைப்படத்துடன் ரஜினிகாந்தின் கெட் அப்பை ஒப்பிட்டு, சூப்பர் ஸ்டார் என்றும் பாரமல் நெட்டிசன்கள் மீம்ஸ் இறக்கி ட்ரோல் செய்து தள்ளினர்.

இந்நிலையில், தற்போது இந்த கெட் அப்பில் ரஜினிகாந்த வீறு நடைபோட்டு நடந்து செல்லும் காட்சி வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

லால் சலாம் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த கபில்தேவ் உடன் இணைந்து பணிபுரிவதாக முன்னதாக ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Maamannan Audio Launch LIVE: ’மாமன்னன்’ படத்தின் கோலாகல இசை வெளியீட்டு விழா... லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget