Entertainment Headlines July 11th: புது கெட்-அப்பில் பனையூரில் விஜய்... சிவன் அவதாரத்தில் அக்ஷய் குமார்...தளபதி 68 அப்டேட்... டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today July 11th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
‘விஜய் மாதிரி டீசன்ட்டா நடந்துக்கோங்க’.. லியோ படம் பற்றிய கேள்விக்கு கடுப்பான மிஷ்கின்...!
லியோ படத்தின் அப்டேட் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன் என இயக்குநர் மிஷ்கின் பதிலளித்த சம்பவம் விஜய் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் 2வது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார். மேலும் படிக்க
லியோ ஷூட்டிங் முடித்த கையுடன் தளபதி 68 பட ஷூட்டிங்...வெங்கட் பிரபு ஹாப்பி அண்ணாச்சி!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் பணியாற்றி வரும் லியோ படத்தில் விஜய்யின் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கைக்கோர்க்கும் தளபதி 68 படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி வரும் நவம்பர் மாதம் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
கெட்டப் மாற்றிய விஜய்.. பனையூருக்கு வந்த ரசிகர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!
மக்கள் இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ள படம் ‘லியோ’ . இதில் விஜய் தொடர்பான காட்சிகள் நேற்று முடிவடைந்த நிலையில், படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளது. மேலும் படிக்க
முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும் என வலியிறுத்தியுள்ளனர். மேலும், படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர்தான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் படிக்க
”தோனியிடம் ‘பேட்’ வாங்கவே இந்த படத்தில் நடித்தேன்” - நடிகர் யோகிபாபு
தோனியிடம் பேசி பேட் வாங்கி தரேன் என்று இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி கூறியதால், எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்ததாக காமெடி நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான தோனியும், அவரது மனைவி சாக்சியும் இணைந்து திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முதல் படமாக ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற எல்ஜிஎம் படத்தை தயாரித்து வருகிறது. மேலும் படிக்க
கடவுளால் கைவிடப்பட்டவர்களே பாலாவின் கதாநாயகர்கள்: இன்று பாலாவின் பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைக் கொண்டவர் இயக்குநர் பாலா. இன்று அவருக்கு 57 ஆவது பிறந்தநாள். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையின் அழகியலை பாலா தனது படங்களில் எப்படி சித்தரித்தார் எனபதை பார்க்கலாம். பாலாவின் கதைக்களங்கள் பெரும்பாலும் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களைப் பற்றியதாகவே இருந்திருக்கிறன. மேலும் படிக்க
'எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை' - சிவனின் அவதாரமாக நடித்துள்ள அக்ஷய்குமார் பேட்டி வைரல்..!
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ஓ மை காட் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு உமேஷ் சுக்லா எழுதி இயக்கிய படம் ‘ஓ மை காட்’. இந்த படத்தில் மிதுன் சக்ரவர்த்தி , அக்ஷய் குமார், பரேஷ் ராவல், ஓம் புரி , கோவிந்த் நாம்தேவ் , பூனம் ஜாவர், பூஜா குப்தா மற்றும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் படிக்க