மேலும் அறிய

Theater Owners Association: முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம்  உள்ளிட்டவர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும் என வலியிறுத்தியுள்ளனர். மேலும், படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர்தான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி கட்டணம் இருக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள், தியேட்டரின் கட்டணத் தொகையை அதிகபட்சம் ரூபாய் 250 வரை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல், குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 40 என்பது ஏற்கனவே உள்ளது. அதனை அப்படியே தொடரவும் எங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். மேலும், எல்லா திரையரங்கு மற்றும் திரைப்படத்திற்கு ரூபாய் 250 கட்டணம் வசூலிக்கும் நோக்கில் கோரிக்கை வைக்கப்படவில்லை. தியேட்டர் மற்றும் திரைப்படத்தைப் பொறுத்து நிர்ணயம் செய்யவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த சந்திப்பில், கடந்த மூன்று மாதங்களாக வெளியான திரைப்படங்கள் நல்ல திரைப்படமாக இல்லாததால் மக்கள் திரையரங்கிற்கு வரவே இல்லை. அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வசூலை கொடுத்தது. அதற்கு முன்னர் வெளியான போர் தொழில் திரைப்படத்திற்கும் குட்நைட் திரைப்படத்திற்கும் மக்கள் திரையரங்கிற்கு அதிகப்படியாக வந்தார்கள். 

புதிய கண்டெண்ட் கொடுத்தால் மக்கள் நிச்சயம் திரையரங்கிற்கு வருவார்கள். நல்ல கதை இருந்தால் புது கதாநாயகனை வைத்து படம் எடுத்தால், படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். ஆனால் இயக்குநர்கள் அந்த முயற்சியை மேற்கொள்வதில்லை. இது இயக்குநர்களிடம் உள்ள தவறு. இதனை இயக்குநர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். 

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் அதிகபட்சம் ரூபாய் 50 தான் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில திரையரங்கில் அதைவிட குறைவாகவும் வசூலிக்கப்படுகிறது. மால்களில் திரையரங்க உரிமையாளர்களிடம் பார்க்கிங் உரிமை இல்லாததால், அங்கு கட்டணத்தை மால் உரிமையாளர்கள்தான் நிர்ணயம் செய்கிறார்கள். 

நல்ல நல்ல படங்கள் வந்தால் மக்கள் அதிகம் திரையரங்கிற்கு வருவார்கள், திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும், இதனால் திரையுலகமும் நன்றாக இருக்கும் என அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினர். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget