மேலும் அறிய

LGM Trailer: ”தோனியிடம் ‘பேட்’ வாங்கவே இந்த படத்தில் நடித்தேன்” - நடிகர் யோகிபாபு

தோனியிடம் பேசி பேட் வாங்கி தரேன் என்று இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி கூறியதால், எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்தேன்

தோனியிடம் பேசி பேட் வாங்கி தரேன் என்று இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி கூறியதால், எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்ததாக காமெடி நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரரான தோனியும், அவரது மனைவி சாக்சியும் இணைந்து திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முதல் படமாக ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற எல்ஜிஎம் படத்தை தயாரித்து வருகிறது.  காதல் திருமணத்தை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த எல்சிஎம் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். லவ் டுடே மூலம் பிரபலமான இவானா, ஹரிஷ் கல்யாண், நதியா, யோகிபாபு என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் போஸ்டர், டீசர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி, ஹரிஷ் கல்யாண், யுவானா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய யோகி பாபு, இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி எல்ஜிஎம் படத்தில் நடிக்க தன்னிடம் கால்ஷீட் கேட்ட போது, யோசித்து கொண்டிருந்ததாகவும்,  தோனியிடம் பேசி பேட் வாங்கி தருகிறேன் என இயக்குனர் கூறியதால் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறியுள்ளார். 

படத்தில் ஹீரோவாக நடித்தது குறித்து பேசிய ஹரீஷ் கிருஷ்ணா, ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் பிரச்சனையை எல்ஜிஎம் பேசியுள்ளதாகவும், இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்ததாக கூறியுள்ளார். இவானா பேசுகையில், தோனி தயாரிக்கும் படத்தில் தானும் ஒரு பகுதியாக இருந்தது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார். 

நிகழ்ச்சியில் வெளியான டீசருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. காதலனின் அம்மாவை புரிந்து கொள்ள திருமணத்துக்கு முன்பாக அவருடன் டூர் செல்லும் காதலியும், காட்டில் நதியாவுடன், இவானா மாட்டி கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றிருப்பது கதையை ஓரளவுக்கு கணிக்க முடிந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
TN Weather News: கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கனமழைக்கு அதிக வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு இன்று அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mahindras Diesel SUV: மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
மஹிந்த்ராவின் டயங்கரமான 4 டீசல் எஸ்யுவிக்கள் - எந்தெந்த மாடல் எப்போது? விலை, அம்சங்கள்
Special Trains : சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்
பக்கவாத கணவர்...கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. காட்டிக் கொடுத்த தாய்...நடுங்க வைத்த கொடூரம்
Embed widget