மேலும் அறிய

OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...

ஓபிஎஸ் தன்னை பற்றி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆர்.பி. உதயகுமார், அதில், ஓபிஎஸ் குறித்து ஜெயலலிதா தன்னிடம் முன்பே கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ், ஆர்.பி. உதயகுமார் இடையேயான வார்த்தைப் போர் முற்றி வருகிறது. ஏற்கனவே, உதயகுமார், ஓபிஎஸ் பற்றி பேசிய நிலையில், அவருக்கு ஓபிஎஸ் பதிலடி கொடுக்கு வகையில் பேசியிருந்தார். தற்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆர்.பி. உதயகுமார், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ்-ஆர்.பி. உதயகுமார் இடையே வார்த்தைப்போர்

ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் யார் என்றே தெரியவில்லை, கூகுளில் அவரை தேடிப் பார்க்கிறேன் என, ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருந்தார். மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அதற்கு பதிலடி கொடுத்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், 2008 காலகட்டத்தில், தன்னுடைய மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க டாக்டர் வெங்கடேசன் முன்வந்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதால், ஜெயலலிதாவிடம் போய் கூறியபோது, மாவட்ட செயலாளர் பதவியை தன் மகனுக்கு வழங்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டதாவும், பின்னர் தானும் அதை ஜெயலலிதாவிடமே உறுதி செய்ததாகவும் கூறினார். மேலும், ஜெயலலிதாவிற்கு அடையாளம் தெரிந்தது போதும், ஆர்.பி. உதயகுமாருக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று ஓபிஎஸ் பதிலடி கொடுத்தார்.

அதோடு, தான் டாக்டர் வெங்கடேசனை சந்திக்க செல்லும்போது, ஆர்.பி. உதயகுமார் எத்தகைய நிலையில் அங்கு அமர்ந்திருந்தார் என்பது பற்றி, அரசியல் நாகரிகம் கருதி தான் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஆர்.பி. உதயகுமார் எப்படி பதவிக்கு வந்தார் என்பது மதுரை மக்கள் அனைவருக்குமே தெரியும் என்று விமர்சித்த அவர், தங்களை பற்றி பேசுவதை ஆர்.பி. உதயகுமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

பதிலடி கொடுத்து ஆர்.பி. உதயகுமார் வீடியோ வெளியீடு

ஓபிஎஸ்-ன் இந்த பதிலடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது வீடியோ ஒன்றை ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்வதாகவும், ஆனால், அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தன்னிடமே ஜெயலலிதா கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் விளைவாகவே, 2010-ம் ஆண்டு, தேனியின் அதிகார மையம் என்று கூறிக்கொண்ட ஓபிஎஸ்-ஐ ஒதுக்கி வைத்துவிட்டு, அங்கு நடந்த முல்லை பெரியாறு உரிமை போராட்டத்திற்கு, தன்னை தலைமை தாங்குமாறு ஜெயலலிதா கூறியதாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதே 2010-ம் ஆண்டு, தேனியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்திலும், ஓ. பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்குமாறு ஜெயலலிதா தனக்கு உத்தரவிட்ட வரலாற்றை ஓபிஎஸ்-க்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

அதேபோல், டாக்டர் வெங்கடேசன் சந்திப்பின்போது, ஓபிஎஸ் எங்கு அமர்ந்திருந்தாரோ அங்குதான் தான் அமர்ந்திருந்ததாகவும், அதனால் அரசியல் நாகரிகம் கருதி சொல்லாமல் விட்டதை, தயவுகூர்ந்து சொல்லுமாறும் ஓபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அதிகாரம் வேண்டுமென்றால் ஓபிஎஸ் அமைதியாக இருப்பார் என்றும், அதிகாரம் இல்லை என்றால் அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இறுதியாக, விரக்தியின் உச்சியிலிருந்து ஓபிஎஸ் பேசியதற்கு, வேதனையின் உச்சியிலிருந்து தாம் பதில் அளிப்பதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஓபிஎஸ் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதே, தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்
Nainar Nagendran: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியா? அண்ணாமலை புயல், நான் யார்?- நயினார் நச் பதில்!
Nainar Nagendran: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியா? அண்ணாமலை புயல், நான் யார்?- நயினார் நச் பதில்!
IPL 2025 RR vs DC: ரன்மழை பொழியுமா டெல்லி? சாம்சனின் பவுலிங் முடிவு கை கொடுக்குமா?
IPL 2025 RR vs DC: ரன்மழை பொழியுமா டெல்லி? சாம்சனின் பவுலிங் முடிவு கை கொடுக்குமா?
Priyanka Deshpande Marriage: பிரபல தொகுப்பாளர் பிரயங்கா திடீர் திருமணம் ! ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து!
Priyanka Deshpande Marriage: பிரபல தொகுப்பாளர் பிரயங்கா திடீர் திருமணம் ! ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TTV Dhinakaran with ADMK: மீண்டும் அதிமுகவில் டிடிவி? மனம் மாறிய இபிஎஸ்! பாஜக பக்கா ஸ்கெட்ச்Seeman vs Sattai durai murugan: பாஜகவில் இணையும் சாட்டை? சீமானுக்கு டாடா! அதிர்ச்சியில் நாதகவினர்!Armstrong Wife Porkodi: எரிமலையாய் வெடித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி ”என்ன தூக்க நீ யாரு?”Ayush Mhatre: 17 வயது மும்பை புயல்.. தட்டித்தூக்கிய தோனி! யார் இந்த ஆயுஷ் மாத்ரே?  CSK | IPL 2025

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்
Nainar Nagendran: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியா? அண்ணாமலை புயல், நான் யார்?- நயினார் நச் பதில்!
Nainar Nagendran: தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியா? அண்ணாமலை புயல், நான் யார்?- நயினார் நச் பதில்!
IPL 2025 RR vs DC: ரன்மழை பொழியுமா டெல்லி? சாம்சனின் பவுலிங் முடிவு கை கொடுக்குமா?
IPL 2025 RR vs DC: ரன்மழை பொழியுமா டெல்லி? சாம்சனின் பவுலிங் முடிவு கை கொடுக்குமா?
Priyanka Deshpande Marriage: பிரபல தொகுப்பாளர் பிரயங்கா திடீர் திருமணம் ! ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து!
Priyanka Deshpande Marriage: பிரபல தொகுப்பாளர் பிரயங்கா திடீர் திருமணம் ! ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து!
"மணிமேகலை விருது" ரூ.5 லட்சம் பரிசு தொகை..! விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி...!
China Faces Heat: இது ரொம்ப ஓவர் பாஸ்.. சீனாவுக்கு வரலாறு காணாத வரி.? அமெரிக்கா அட்ராசிட்டி...
இது ரொம்ப ஓவர் பாஸ்.. சீனாவுக்கு வரலாறு காணாத வரி.? அமெரிக்கா அட்ராசிட்டி...
ஐ.நாவுக்கு கடைசி முகலாய வாரிசு கடிதம்: ஔரங்கசீப் கல்லறையை காப்பாற்றுங்கள்..என்ன நடந்தது?
ஐ.நாவுக்கு கடைசி முகலாய வாரிசு கடிதம்: ஔரங்கசீப் கல்லறையை காப்பாற்றுங்கள்..என்ன நடந்தது?
Annamalai's BJP Posting: அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
Embed widget