OMG 2 Teaser: 'எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை' - சிவனின் அவதாரமாக நடித்துள்ள அக்ஷய்குமார் பேட்டி வைரல்..!
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ஓ மை காட் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
![OMG 2 Teaser: 'எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை' - சிவனின் அவதாரமாக நடித்துள்ள அக்ஷய்குமார் பேட்டி வைரல்..! OMG 2 Teaser Released a throwback statement of Akshay Kumar on religion has surfaced online OMG 2 Teaser: 'எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை' - சிவனின் அவதாரமாக நடித்துள்ள அக்ஷய்குமார் பேட்டி வைரல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/13588152017c5a23884420dcc7380f2b1689074242498572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ஓ மை காட் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
ஓ மை காட் - முதல் பாகம்
கடந்த 2012 ஆம் ஆண்டு உமேஷ் சுக்லா எழுதி இயக்கிய படம் ‘ஓ மை காட்’. இந்த படத்தில் மிதுன் சக்ரவர்த்தி , அக்ஷய் குமார், பரேஷ் ராவல், ஓம் புரி , கோவிந்த் நாம்தேவ் , பூனம் ஜாவர், பூஜா குப்தா மற்றும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
நாத்திகனான பரேஷ், கடவுளைப் பெரிய வியாபாரமாகப் பார்க்கிறார். அதன்படி மும்பைக்கு வெளியில் இருந்து மொத்தமாக எடுத்து வரும் சிலைகளை விற்பவராக இருக்கிறார். இதனிடையே அந்த நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் பரேஷ் கடை சேதமடைகிறது. இது கடவுளின் செயல் என்று கூறி காப்பீட்டு நிறுவனம் அவரது கோரிக்கையை நிராகரிக்கிறது. இதனால் பரேஷ் கடவுள் மீது வழக்குத் தொடர்கிறார். நீதிமன்றம் அவரது வழக்கை ஏற்றுக்கொள்கிறது. இதன்பின்னர் என்ன நட்னதது என்பது தான் இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
ஓ மை காட் - இரண்டாம் பாகம்
அந்த காலக்கட்டத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பிய இப்படத்தின் 2 ஆம் பாகம் 11 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ளது. அமித் ராய் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி, யாமி கௌதம், அருண் கோவில், கோவிந்த் நாம்தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் சிவபெருமானின் அவதாரமாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். முதல் பாகத்தில் பரேஷ் ராவல் ஒரு நாத்திகராக சித்தரிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவராக காட்டப்பட்டுள்ளது.
அதே வேளையில், நடிகர் அக்ஷய் குமார் அளித்த மதம் பற்றி பேசும் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில், “எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை. நான் இந்தியனாக இருப்பதை மட்டுமே நம்புகிறேன். அதைத்தான் படங்களும் காட்டுகிறது. இந்தியன் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இருக்கும் நாங்கள் மதங்கள் அடிப்படையில் எதையும் பார்க்கவில்லை’ என தெரிவித்திருந்தார். இந்த பேட்டி 2021 ஆம் ஆண்டு வெளியான ‘சூர்யவன்ஷி’ பட ப்ரோமோஷனின்போது எடுக்கப்பட்டு இருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)