மேலும் அறிய

Crime : காதலனுக்காக வீட்டைவிட்டு ஓடிய சிறுமி! மனைவி இல்லாத நேரத்தில் கணவன் செய்த காரியம்

தஞ்சாவூர்: சென்னை நெசப்பாக்கம் பகுதியை  சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லைன் என்றும் அவர் தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று புகார் தஞ்சை போலீசாருக்கு வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த டிரைவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியின் காதலனையும் கைது செய்தனர்.

சென்னை நெசப்பாக்கம் பகுதியை  சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை. அவர் தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று புகார் தஞ்சை போலீசாருக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வாலிபருடன் அந்த சிறுமி நிற்பதை போலீசார் கண்டுள்ளார். உடன் அந்த சிறுமி மற்றும் வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். இதில் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இருவரையும் அழைத்து சென்று ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் அந்த சிறுமியை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.ஜெகதீஸ்வரன் (24). கூலித் தொழிலாளி. இவர் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதை சிறுமியும் நம்பி பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஜெகதீஸ்வரன் சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துவிட்டார்.

பின்னர் அந்த சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்தபோது தஞ்சைக்கு புறப்பட்டு வா என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார். இத்தகவலை ஜெகதீஸ்வரனுக்கும் தெரிவித்துள்ளார். அப்போது ஜெகதீஸ்வரன் இப்போது பேசிக் கொண்டு இருக்கும் சிம்மை கழற்றி விட்டு வேறு ஒரு சிம்மில் இருந்து பேசு என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சிறுமியும் செய்துள்ளார்.

பின்னர் கடந்த 13ம் தேதி தஞ்சாவூருக்கு வந்த சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் ஜெகதீஸ்வரன் போனை எடுக்கவும் இல்லை. மறுபடியும் தொடர்பு கொள்ளவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி செய்வதறியாது அழுது கொண்டே தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது இதை கவனித்த ஒருவர் அந்த சிறுமியை அணுகி எதற்காக அழுகிறாய் என்று கேட்க தன்னை பற்றிய விபரங்களை சிறுமி அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்ஜினியரை லெப்ட் ரைட் வாங்கிய நாமக்கல் கலெக்டர்! கையெடுத்து கும்பிட்ட மக்கள்!

இதையடுத்து அந்த நபர் என் வீட்டிற்கு வா. பின்னர் உன் காதலனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று அக்கறைக்காட்டுவது போல் நடித்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த போது போலீசில் சிக்கி உள்ளார். இத்தகவல்களை சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை விசாரித்துள்ளனர். இதில் அவர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த சி.புவனேஸ்வரன் (30) என்பதும், வீட்டில் மனைவி இல்லாத நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும் சிறுமியை காதலித்த  ஜெகதீஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியை பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget