மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்..

Mettur Dam : மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருப்பதால், டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 329 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 318 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 317 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்..

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 110.03 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 78.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெற்றது. மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதுதான்..

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget