இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் கணக்கு ஹேக்? அவரே சொன்ன விளக்கம்!
லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வெளியான கைதி திரைப்படம், இவருக்கு சிறந்த இயக்குனர் என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது. இந்நிலையில் முன்னனி நடிகர்கள் இவரின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினர்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ்:
விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ். இதனையடுத்து கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம், விஜய் நடிப்பில் லியோ என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ், அடுத்ததாக ரஜினிகாந்தின் 171-ஐயும் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைட் கிளப்' (Fight Club) திரைப்படத்தில் 'உறியடி' விஜய்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும்,கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர்.
பேஸ்புக் கணக்கு ஹேக்கா?
ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக டிவிட்டரில் தகவல் பரவியது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், தனகு இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் தவிர வேறு எந்த சமூகவலைதள பக்கத்திலும் கணக்கு இல்லை எனவும், எனவே தன் பெயரிலான பேக் கணக்குகளை புறக்கணிக்குமாறும் பின்தொடர வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.
Hey all, I’m only available on Twitter and Instagram, I do not have or use any other social media accounts. Please feel free to ignore and unfollow any other hoax accounts!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 13, 2023
மேலும் படிக்க

