மேலும் அறிய

ABP NADU IMPACT: சென்னையில் வெள்ள பாதிப்பால் நெட் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு- யுஜிசி அறிவிப்பு

புயல் பாதிப்பால் நெட் தேர்வை எழுத முடியாத தமிழகத் தேர்வர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் புயல் பாதிப்பால் பல்கலைக்கழகத் தேர்வுகள் பலவும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், யுஜிசி நெட் தேர்வு நடைபெற்றது குறித்து ABP Nadu செய்தி வெளியிட்ட நிலையில், நெட் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மிக்ஜாக் புயல் வட தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கோரத் தாண்டவமாடி விட்டு, ஆந்திராவில் 5ஆம் தேதி கரையைக் கடந்தது. புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் வெள்ளம் தெருவைச் சூழ்ந்து, வீடுகளில் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இயல்பு நிலை கடுமையாக பாதிப்பு

இதை அடுத்து, டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 10ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) டிச. 6ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. குறிப்பாக டிசம்பர் 6ஆம் தேதி ஆங்கிலம், வரலாறு, இந்தி ஜெர்மனி உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கும் மதங்களுக்கு இடையேயான ஒப்பீட்டு ஆய்வு உள்ளிட்ட பாடத்துக்கும் தேர்வு நடைபெற்றது. காலை, மதியம் என 2 ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெற்றது. 

தேர்வர்கள் வேதனை

முன்னதாக மழை வெள்ள பாதிப்பு காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட தேர்வு மையங்களில் நெட் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. தேர்வர்கள் சமூக வலைதளங்களில் இதுகுறித்துப் பதிவிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன், யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமாருக்குக் கடிதம் எழுதினார்.

எனினும் திட்டமிட்டபடி தேர்வு டிசம்பர் 6 அன்று நடைபெற்றது. இதற்கு, மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து UGC EXAM : புயல் பாதிப்புக்கு நடுவே சென்னையில் யுஜிசி நெட் தேர்வு; மாணவர்கள் வேதனை- ஒத்திவைக்கக் கோரிக்கை! என்ற தலைப்பில் ABP Nadu-ல் செய்தி வெளியானது. 

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, ஆந்திராவில் நெல்லூர் ஆகிய தேர்வு மையங்களில், டிசம்பர் 6ஆம் தேதி அன்று எழுத முடியாமல் போனவர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி மறு தேர்வு நடைபெறும் என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 14ஆம் தேதி மறுதேர்வு

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''புயல் பாதிப்பால் டிசம்பர் 6ஆம் தேதியன்று தேர்வை எழுத முடியாமல் போன தேர்வர்களுக்கு அந்த நாளில் நடந்த தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 14ஆம் தேதியும் நடத்தப்படும். வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணைய தள முகவரியை க்ளிக் செய்து காணலாம்'' என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பரத் என்னும் தேர்வர் ABP Nadu-விடம் கூறும்போது, ’’மழை வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக பெரும்பாலான தேர்வர்களால், தேர்வு மையத்துக்குச் செல்ல முடியவில்லை. எல்லா தேர்வு மையங்களுமே நகரத்தில் இருந்து தொலைவில்தான் இருக்கின்றன.

ஹால் டிக்கெட் பெறுவதிலும் நிலவிய சிக்கல்

முன்னதாக நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் இருந்தது. ஏனெனில் மிக்ஜாம் வெள்ள பாதிப்பால் எங்குமே தொலைதொடர்பு, இணைய வசதி சரியாகாத சூழல் இருந்தது. இந்த நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று யுஜிசி தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் தேர்வு ஒத்திவைக்கப்படாமல் நடைபெற்றதால் எல்லோருமே சிரமத்துக்கு ஆளாகினோம். இந்த நிலையில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Embed widget