சால்ட் அண்ட் பெப்பர் லுக்! வெளியானது சிரஞ்சீவி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...
சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட் அப்பில் ஸ்லோ மோஷனில் மோகன் லால் காரில் இருந்து இறங்கி வரும் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தெலுங்கில் மெகா ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
மலையாள லூசிஃபர் ரீமேக்
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரபல நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் லூசிஃபர். மோகன்லால் தவிர்த்து டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவெக் ஓபராய் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்த இப்படம் பொலிடிக்கல் த்ரில்லர் பாணி படமாகும்.
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் படமாக்கப்பட்டு வந்தது.
காட்ஃபாதர் ஃபர்ஸ்ட் லுக்
நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், திருமணத்துக்குப் பிறகு அவரது நடிப்பில் வெளியாகும் படமாக காட்ஃபாதர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தை ஆர்.பி. சௌத்ரி, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்நிலையில் முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஒன்று வெளியாகி தெலுங்கு சினிமா ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மேலும் காட்ஃபாதர் திரைப்படம் தசரா பண்டிகையின் போது வெளியாகும் என்ற தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
Without Logos !#GodFather #GodFatherFirstLook out now 💥💥
— Konidela Pro Company (@KonidelaPro) July 4, 2022
- https://t.co/eiMebYqDar@KChiruTweets @BeingSalmanKhan @jayam_mohanraja #Nayanthara @MusicThaman @AlwaysRamCharan @ProducerNVP @SuperGoodFilms_ @KonidelaPro @saregamasouth pic.twitter.com/BFalEUzC7N
சால்ட் அண்ட் பெப்பரில்...
சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட் அப்பில் ஸ்லோ மோஷனில் மோகன் லால் காரில் இருந்து இறங்கி வரும் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பூரி ஜெகநாத், சத்யா தேவ் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: Bigg Boss 6 Tamil Contestants: விரைவில் பிக்பாஸ் 6! ரெடியாகுது போட்டியாளர்கள் லிஸ்ட்! வெளியான பெயர்கள் இதோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்