Bigg Boss 6 Tamil Contestants: விரைவில் பிக்பாஸ் 6! ரெடியாகுது போட்டியாளர்கள் லிஸ்ட்! வெளியான பெயர்கள் இதோ..
கடந்த முறை பிக்பாஸில் பங்கேற்பாளர்கள் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டிருந்தனர்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பின் ஆறாவது சீசன் இந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆறாவது முறையாக கமல்ஹாசன் மீண்டும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவார் என்றும், ஏற்கனவே பிரபல போட்டியாளர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் ஒவ்வொரு சீசனிலும் பெரும்பான்மையான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பிரமுகர்கள் தவிர, ஜூலியானா மரியானா மற்றும் லாஸ்லியா மரியநேசன் போன்ற சிலரும் எதிர்பாராத போட்டியாளராக களமிறங்கினர். இந்நிலையில் ஜூலை மாதம் தொடங்கிவிட்டதால் பிக்பாஸுக்கான வேலை கெடுபிடியாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் செட் அமைக்கும் பணி என்றால் மறுபக்கம் போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலை நடந்து வருகிறதாம். கடந்த முறை பிக்பாஸில் பங்கேற்பாளர்கள் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வரும் பிக்பாஸுக்கு சிறப்பான போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டுமென தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக வேலைபார்த்து வருகிறதாம். வழக்கம்போல் ட்ரெண்டிங்க், காமெடி, காதல் ஜோடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்தே போட்டியாளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில போட்டியாளர்களின் விவரம் கசிந்துள்ளது. அதன்படி ஏற்கெனவே தகவல் வெளியானப்படி, ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க டி. இமானின் முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்டுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமானை திருமணம் செய்து 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். அவர்களுக்கு பிளெசிகா மற்றும் வெரோனிகா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் மோனிக்காவின் பாதுகாப்பில் தற்போது இருக்கின்றனர். அதேபோல் விஜய் டிவியின் குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கும் ரக்ஷனும் போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க: Nayanthara Luxury Home: லேடி சூப்பர் ஸ்டாரின் போயஸ் வீடு.. தியேட்டர் முதல் ஜிம் வரை.. நயன் வீட்டு இண்டீரியர் இத்தனை கோடியில்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















