RajuVootlaParty: ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் வெங்கட்பிரபு ‛டீம்’... அப்புறம் என்ன ஒரே ஜாலி தான்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் சென்னை 28 இல் நடித்தவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளில் இருந்து வித்தியாசமாகவே இருக்கும். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என வார நாட்களிலும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி பார்வையாளர்களை தங்கள் பக்கம் கட்டிப் போட்டு விடுகின்றனர்.
View this post on Instagram
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான ராஜூ தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதில் இமான் அண்ணாச்சி, மதுரை முத்து, பிரியங்கா, தீபா, ஷிவா அரவிந்த் என பலரும் உள்ளனர். ராஜூ வீட்டு பார்ட்டிக்கு வரும் பிரபலங்களிடம் கேள்விகள், டாஸ்குகள் என இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
View this post on Instagram
இந்த நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளியான ராஜி வூட்ல பார்ட்டியில் இயக்குநர் வெங்கட் பிரபு, வைபவ் மற்றும் விஜயலட்சுமி அனைவரும் பங்கேற்று இருந்தனர். தற்போது அந்த நிகழ்ச்சியின் கட் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.