Actress jenni : பாக்கியலட்சுமி நடிகைக்கு கிடைத்த பாக்கியம்...குழந்தையின் புகைப்படம் வெளியிட்டு பரவசம்!
சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து அவர் விலகினார். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
![Actress jenni : பாக்கியலட்சுமி நடிகைக்கு கிடைத்த பாக்கியம்...குழந்தையின் புகைப்படம் வெளியிட்டு பரவசம்! bhakkiyalaxmi fame jenifer shares her new born baby pictures in instagram Actress jenni : பாக்கியலட்சுமி நடிகைக்கு கிடைத்த பாக்கியம்...குழந்தையின் புகைப்படம் வெளியிட்டு பரவசம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/08/8dd4e55ad790b1a49c68d50ebc7d54ab_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த தொடரில் ராதிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை நந்திதா ஜெனிஃப்பர் நடித்து வந்தார். பிரபல நடனக் கலைஞர் சின்னாவின் மகளான ஜெனிஃப்பர், சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர், ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனை திருமணம் செய்து கொண்டதன் மூலம் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து அவர் விலகினார். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ராதிகாவாக நடித்து வந்த ஜெனிஃப்பர் விலகியதற்கு நெட்டிசன்கள் மத்தியில் வருத்தம் நிலவியது. “பழைய ராதிகாவே நடிக்க வேண்டும்” என பதிவுகளும் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில், சமீபத்தில் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஜெனிபர் முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைபார்த்து பரவசமான அவரது ரசிகர்கள் லைக்ஸ்களைஅள்ளி தெளித்து வருகின்றனர்.
View this post on Instagram
முன்னதாக, கர்ப்பமாக இருந்தபோது கணவருடன் ஜெனிஃப்பர் எடுத்துக்கொண்ட ‘அண்டர் வாட்டர் ஃபோட்டோஷூட்’ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “இந்த அண்டர் வாட்டர் ஃபோட்டோஷூட் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. வாழ்நாளுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இது நினைவில் இருக்கும்” என தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)