அதகளமாக வெளியான கொம்புசீவி மேக்கிங் வீடியோ... தந்தையை போலவே ஆக்சனில் மிரட்டும் சண்முக பாண்டியன்!
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள கொம்புசீவி படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சகாப்தம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் சண்முக பாண்டியன். அதைத்தொடர்ந்து மதுரை வீரன், படைத்தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படைத்தலைவன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக கோட்டை விட்டாலும், அடுத்தடுத்த படங்களில் சண்முக பாண்டியன் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் நடித்து முடித்திருக்கும் மற்றொரு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
நன்றி மறக்காத சரத்குமார்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பொன்ராம். இவர், காமெடி படங்களை இயக்குவதில் திறம் படைத்தவர். ரசிகர்களை கவரும் வகையில், வசனங்களும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் இவரது பங்கும் அளப்பறியது. இந்நிலையில், சண்முக பாண்டியனை வைத்து கொம்புசீவி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்த் உதவி செய்ததை மறக்காத சரத்குமார் சண்முக பாண்டியனின் வளர்ச்சிக்காக இப்படத்தில் நடிக்க முன்வந்துள்ளார். இப்படத்தில் அவரது கதாப்பாத்திரமும் பேசப்படும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உண்மை சம்பவத்தின் கதை
90களில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இயக்குநர் பொன்ராம் கொம்புசீவி படத்தை இயக்கியுள்ளார். மதுரை சீமையில் இது மற்றொரு கதைக்களம் என்றும் பேசப்படுகிறது. இப்படத்தில் சண்முக பாண்டியனுடன், தார்னிகா, காளி வெங்கட், கல்கி ராஜா மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சினிமா கரியரில் சண்முக பாண்டியனுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் படமாகவும் இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சண்டை காட்சிகளில் தனது தந்தையை போலவே சிறப்பாக நடித்திருப்பதாக அண்மையில் பாராட்டை பெற்றார்.
படப்பிடிப்பு நிறைவு
விறுவிறுப்பாக நடந்து வந்த கொம்புசீவி படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. படக்குழுவினருடன் இயக்குநர் பொன்ராம், சண்முக பாண்டியன், சரத்குமார் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சிறப்பாக இசையமைத்து வருகிறார். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் பிக்சர்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. மேக்கிங் வீடிேயா ஒரு படத்தை பார்க்கும் உணர்வை அளித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தை திரையில் காண ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்
🎬 That’s a Wrap! 💥
— Star Cinemas (@StarCinemas_) July 2, 2025
An unforgettable journey with sweat, laughter, and action-packed moments – #KombuSeeevi
Stay tuned – something massive is coming your way soon! 🎉🔥@realsarathkumar @ShanmugaP_Actor #Tharnika#Kombuseevi #OnceUponATimeInUsilampatti pic.twitter.com/ibDMeQCmOK





















