மேலும் அறிய

Film Festival History - 3 : 'களைகட்டிய கேன்ஸ்’ சிறப்பித்த படங்களின் சுவாரஸ்யங்கள்..!

வழக்கமான திரைப்பட கட்டமைப்புகளில் இருந்து சற்று மாறுபட்ட பாணியிலோ அல்லது கதையமைப்பிலோ புதுமையான முயற்சிகளை கொண்ட திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருது.

2022-ம் ஆண்டுக்காண கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் அனைவரும் பங்கேற்கும் வகையில் நிகழ்ந்ததால் கூடுதல் கவனத்தை இந்தாண்டு பெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் விழாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு கலந்து கொண்டன.  திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகிய பிரிவுகள் இவற்றில் அடங்கும். போட்டிப் பிரிவு, சிறப்பு திரையிடல்கள் என பல்வேறு சிறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கேன்ஸ் விழாவின் பிரதான விருதான ”தங்கப் பனை விருதினை”  (Palme d'Or)  இந்தாண்டு சுவீடனைச் சேர்ந்த இயக்குனர் ரூபன் ஆஸ்லண்ட்( Ruben ostlund ) இயக்கிய ட்ரயாங்கில் ஆஃப் சாட்னஸ் ( Triangle of sadness )  பெற்றுள்ளது. இதுபோல, இந்த ஆண்டு கேன்ஸில் பல்வேறு பரிவுகளில் கலந்து கொண்டு விருதினைப் பெற்ற படைப்புகளை பற்றி பார்க்கலாம்.

இயக்குனர்_ரூபன்_ஆஸ்லண்ட்_தங்கப்பனை_விருதுடன்
இயக்குனர்_ரூபன்_ஆஸ்லண்ட்_தங்கப்பனை_விருதுடன்

தங்கப் பனை ( Palme d'Or )  

கேன்ஸின் தலையாய விருதான தங்கப்பனையை பெறுவதற்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 திரைப்படங்கள் கலந்து கொண்டன.

விருதினை பெற்ற திரைப்படம்:

ட்ரயாங்கில் ஆஃப் சாட்னஸ் (Triangle of sadness) – சுவீடன்

இயக்குனர்:  ரூபன் ஆஸ்லண்ட் (Ruben ostlund)

திரைப் பார்வை: மாடலிங் தம்பதியான கார்ல் மற்றும் யாயா ஒரு உல்லாசப் பயணக் கப்பலில் பயணிக்க அழைக்கப்பட்டு பயணிக்கும் வேளையில், உடன் பயணிக்கும் பல்வேறு தரப்பட்ட மக்களுடனான உறவுகளையும் திடீரென பயணத்தில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.

சிறந்த இயக்குனர் பார்க் சான் வூக்
சிறந்த இயக்குனர் பார்க் சான் வூக்

Un Certain Regard

இவ்விருதானது வழக்கமான திரைப்பட கட்டமைப்புகளில் இருந்து சற்று மாறுபட்ட பாணியிலோ அல்லது கதையமைப்பிலோ புதுமையான முயற்சிகளை கொண்ட திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருது.

இவ்வாண்டு இந்த பிரிவில் 20 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

விருதினை பெற்ற திரைப்படம் :

தி வொர்ஸ்ட் ஒன்ஸ் ( The worst ones ) – ஃபிரான்ஸ்

இயக்குனர் : லிஸ் அகோகா ( Lise Akoka ) மற்றும் ரோமேன் கெரேட்(Romane Gueret )

திரைப் பார்வை: ஃபிரான்ஸ் நாட்டின் வடக்குப் பகுதி நகரத்தில் நடக்கும் ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்கான நடிகர்கள் தேர்வில், சுற்றத்தினரால் ஒழுங்கீனமானவர்களாக சொல்லப்படும் சில இளம் வயதினர் திரைப்படத்தில் நடிப்பதற்கு தேர்வாகிறார்கள் என்பதினை ஒட்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

க்ளோஸ் திரைப்பட பதாகை
க்ளோஸ் திரைப்பட பதாகை

 Grand prix

கிராண்ட் பிரிக்ஸ் எனும் இப்பிரிவு தங்கப்பனை விருதிற்கு அடுத்த இடமாக கருதப்படுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதினை பெற்ற திரைப்படங்கள்

க்ளோஸ் ( Close ) – பெல்ஜியம் ( Belgium )

இயக்குனர் : லூகாஸ் தோண்ட்( Lukas Dhont )

திரைப்பார்வை : இரண்டு பதின்ம வயது நண்பர்களுக்குள் நிகழும் நட்பின் சம்பவங்களும், அந்த வயதிற்கேயான பருவ மாற்றங்களை குறித்து இத்திரைப்படம் பேசுகிறது.

மற்றும்

ஸ்டார்ஸ் அட் நூன் ( Stars at Noon )

இயக்குனர் : கிளாரி டெனிஸ் ( Claire Denis )

நிகாரகுவாவில் 1984-ம் ஆண்டில் , ஆங்கிலேய தொழிலதிபருக்கும் அமெரிக்க பத்திரிக்கையாளருக்குமான காதலையும் அதன் தொடர்சியாக நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ட்ரையாங்கில்_ஆப்_சாட்னஸ்_திரைக்காட்சி
ட்ரையாங்கில்_ஆப்_சாட்னஸ்_திரைக்காட்சி

சிறந்த இயக்குனர் விருது

பார்க் சான் வூக் ( Park Chan-wook)

திரைப்படம் : டெசிசன் டூ லீவ் ( Decision to Leave ) – தென் கொரியா 

சிறந்த நடிகை விருது

ஜர் அமீர் இப்ராஹிமி – ( Zar Amir-Ebrahimi )

திரைப்படம் : ஹோலி ஸ்பைடர் ( Holy spider ) – ஈரான்

சிறந்த நடிகர் விருது

ஸாங் காங் ஹோ ( Song Kang Ho )

புரோக்கர் ( Broker ) – தென் கொரியா

 சிறந்த திரைக்கதை விருது

பாய் ஃப்ரம் ஹெவன் ( Boy from heaven ) – சுவீடன் ( அரபு மொழி )

திரைக்கதை ஆசிரியர் : தாரிக் ஸலே ( Tarik saleh )

தங்கப் பனை விருதினை பெற்ற திரைப்படம்
தங்கப் பனை விருதினை பெற்ற திரைப்படம்

Camera d’Or

இவ்விருதானது முதல் படைப்பிற்காக வழங்கப்படுகிறது. திரைப்படம், ஆவணப்படம் , அனிமேசன் என எந்த பிரிவாக இருந்தாலும் 60 நிமிடங்களுக்கு மேல் திரையரங்கில் திரையிடப்பட்ட படைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விருதைப் பெற்ற திரைப்படம்

வார் போனி ( War Pony ) – அமெரிக்கா

இயக்குனர்: ஜினா கெமல் ( Gina Gammell )மற்றும் ரைலி கியூஃ (Riley keough   )

திரைப்பார்வை : பைன் ரிட்ஜ் ரிசர்வேசன் எனும் அமெரிக்க பழங்குடிப் பகுதியில் வசிக்கும் இரண்டு ஒக்லலா டகோட்டா பழங்குடி இளைஞர்களை பற்றி பேசுகிறது இத்திரைப்படம்.

விருதினைப்_பெற்ற_இந்திய_ஆவணப்படத்தின்_விளம்பரப்_பதாகை
விருதினைப்_பெற்ற_இந்திய_ஆவணப்படத்தின்_விளம்பரப்_பதாகை

குறும்பட தங்கப்பனை ( Short Film Palme d’Or )

சிறந்த குறும்படங்களுக்கான விருதாக வழங்கப்பட்டு வருகிறது.

விருதினை பெற்ற குறும்படம்

த வாட்டர் மர்மர்ஸ் ( The water Murmurs ) – சீனா

இயக்குனர் : ஸ்டோரி சென் ( Story Chen )

திரைப்பார்வை : ஒரு நதிப்புற பகுதியில் மோதிய சிறுகோளால் எரிமலை வெடிப்பு ஏற்படுவதை தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் ஒரு பெண் தன் பால்ய கால சிநேகிதியை சந்திப்பதை பற்றி பேசுகிறது இத்திரைப்படம்.

L'Œil d'or, Le prix du documentaire  (தங்க கண் விருது )

சிறந்த ஆவணப்படங்களுக்காக 2015-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்விருது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

விருதினை பெற்ற திரைப்படம்

ஆல் தட் பிரீத்ஸ் ( All that Breathes ) – இந்தியா

இயக்குனர் : ஷானக் சென் ( Shaunak sen )

திரைப்பார்வை : காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் வன்முறையால் கைவிடப்படும் விலங்கினங்களை வளர்க்கும் இரண்டு சகோதரர்களை பற்றி பேசுகிறது இந்த ஆவணப்படம்.

டிசிசன் டு லீவ் திரைப்பட பதாகை
டிசிசன் டு லீவ் திரைப்பட பதாகை

Cinefondation

திரைப்பட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் சார்பில், படிக்கும் மாணவர்கள் உருவாக்கிய திரை படைப்பிற்காக இவ்விருதானது வழங்கப்படுகிறது.

விருதினை பெற்ற திரைப்படம்

முதல் பரிசு

எ கான்ஸ்பைரஸி மேன் ( A Conspiracy Man) - இத்தாலி

இயக்குனர் : வளேரியோ பெரரா

திரைப்பார்வை : ரோமின் ஒரு பகுதியில் சதிக் கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ள ஒரு சவரத் தொழிலாளியைப் பற்றி பேசுகிறது இக்குறும்படம்.

பல்வேறு தலைப்புகளில் பற்பல பிரிவுகளில் மேலும் பல விருதுகள் கேன்ஸ் விழாவில் வழங்கப்பட்டு வந்தாலும் மேற்குறிப்பிட்ட பிரிவுகள் தான் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெற்றதாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
Volvo EX30: ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
Embed widget