மேலும் அறிய

தஞ்சையில் ஹோட்டல் ஊழியரை கொன்று பணம், பைக் திருடிய 2 பேர் கைது

குடிபோதையில் இருந்த பிரகாசை அவரது பைக்கில் ஒருவர் அழைத்து செல்வதும், பின் தொடர்ந்து மற்றொருவர் பைக்கில் செல்வதும் தெரியவந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஹோட்டல் ஊழியரை கொலை செய்து பணம், செல்போன், பைக்கை திருடிச் சென்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிக்கன் கிரில் மாஸ்டர்

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40). இவருடைய மனைவி கமலாதேவி(35). தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான்நகரில் உள்ள ஒரு சிக்கன் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரகாஷ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. 

வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை

இதை அடுத்து பிரகாஷின் மனைவி கமலாதேவி செல்போனில் தொடர்பு கொள்ள போது ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது.  பல இடங்களில் பிரகாசை தேடி கமலா தேவி பார்த்தார். ஆனால் பிரகாஷ் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்நிலையில் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் பிரகாஷ்  இறந்து கிடப்பதாக கமலாதேவிக்கு அவரது உறவினர் தகவல் தெரிவித்தார். 

கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

உடனே சம்பவ இடத்திற்கு சென்று கமலா தேவி சென்று பார்த்தபோது பிரகாஷ் உடலில் காயத்துடன் பிணமாக கிடந்ததை பார்த்து கமலாதேவி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் கமலாதேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

தனிப்படை போலீசார் விசாரணை

அப்போது குடிபோதையில் இருந்த பிரகாசை அவரது பைக்கில் ஒருவர் அழைத்து செல்வதும், பின் தொடர்ந்து மற்றொருவர் பைக்கில் செல்வதும் தெரியவந்தது. இந்த காட்சிகளில் பதிவான புகைப்படங்களை வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் புகைப்படத்தில் இருந்தவர்கள் தஞ்சை ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆட்டோ டிரைவர் தமிழ்நீதி(29), தஞ்சை மங்களபுரம் அனில்நகரை சேர்ந்த ரமணி மகன் பிரவீன்(28) என்பதும் தெரியவந்தது. 

இருவர் கைது

இதையடுத்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் குடிபோதையில் இருந்த பிரகாசை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்து கொண்டதுடன் பைக்கையும் எடுத்து கொண்டு சென்றதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இவர்கள் தாக்கியதில் பிரகாஷ் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு கொலை வழக்கு

தஞ்சை வண்டிக்காரத் தெரு கருப்பாயி அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் கோபிநாத். பெயிண்டர். இவருடைய மனைவி சரண்யா (31). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த கோபிநாத் விளக்குமாறு கைப்பிடியால் சரண்யாவில் முகத்தில் தொடர்ந்து பல முறை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரண்யா அலறியுள்ளார். உடன் அக்கம்பக்கத்தினல் ஓடி வந்து சரண்யாவை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
வன்முறையாக மாறிய பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளியான ஷாக்கிங் சி.சி.டி.வி வீடியோ..
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs EPS: “அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
“அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
Zelensky Vs America: இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
Toyota Innova Hycross: 2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
Car Tips: பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
US Iran War China: ஈரானுக்கு சீனாவின் சீக்ரெட் ஆயுத சப்ளை; அமெரிக்க உளவுத்துறை போட்ட குண்டு; வெளியான பரபரப்பு தகவல்
ஈரானுக்கு சீனாவின் சீக்ரெட் ஆயுத சப்ளை; அமெரிக்க உளவுத்துறை போட்ட குண்டு; வெளியான பரபரப்பு தகவல்
Embed widget