மேலும் அறிய

Crime: காலையில் பெண்ணிடம் நகை பறிப்பு ; இரவில் சாலை விபத்தில் மரணம் - பொள்ளாச்சியை அதிரவைத்த இளைஞர்கள்

பழனியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த இருவரும் கடந்த 6 ம் தேதி தப்பி வந்ததும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தப்பியோடியதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த இளைஞர்கள் குறித்தும், விபத்து ஏற்பட்டது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள கடை வீதியில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற இளைஞர்கள் தான் விபத்தில் உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் கோவை குனியமுத்தூர் பகுதியில் திருடப்பட்ட இரு சக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரையாதவும் ஓட்டி வந்த போது சாலையில் தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சஞ்சய் (17) மற்றும் திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த ஹரி மதன் (17) என்பதும், அவர்கள் மீது பல்வேறு திருட்டு மற்றும் நகை பறிப்பு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பழனியில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த இருவரும் கடந்த 6 ம் தேதி தப்பி வந்ததும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தப்பியோடியதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget