மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற முதியவருக்கு 10 ஆண்டு சிறை
மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 58 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.
கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்மங்கலம் தாலுக்கா, சோமுர் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர் காமாட்சி. இவரது மகள் மனவளர்ச்சி குன்றிய பெண் என்பதால் வீட்டில் இருந்து கொண்டு ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அர்ஜுனன் என்பவர் காமாட்சியின் உறவினர் ஆவார். இந்நிலையில் கடந்த 06:09:2020 அன்று காலை 10:30 மணிக்கு மனவளர்ச்சி குன்றிய பெண் ஊரில் உள்ள ரைஸ்மில்லுக்கு அருகே உள்ள சாலையில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்த போது அங்கு வந்த அர்ஜுனன் அப்பெண், மன வளர்ச்சி குன்றியவர் என தெரிந்தும் அவரை சாலையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
அந்த சமயத்தில், அவ்வழியாக வந்த அன்பரசன், சக்திவேல் ஆகியோர் அர்ஜூனனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது சம்பந்தமாக கடந்த 06:09:2020 இவ்வழக்கு சம்பந்தமாக மேற்படி பெண்ணின் தாயார் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பெயரில் விசாரணை மேற்கொண்ட கரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து, வழக்கின் சாட்சிகளை விசாரணை செய்து u/sec.376(2)(f)(1) r/w.511of I.P.C. குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி வழக்கை விசாரணைக்காக எடுத்துக் கொண்ட இந்நீதிமன்றம் அரசு தரப்பில் 1 முதல் 10 வரையிலான சாட்சிகளை விசாரணை செய்தும், அரசு தரப்பில் 1 முதல் 16 வரையிலான ஆவணங்களை குறியீடு செய்து இருதரப்பு வாதுரைகளை கேட்டு இன்று கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தண்டனை வழங்கியுள்ளது.
இது குறித்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசில் மன வளர்ச்சி குன்றிய பெண்ணின் தாயார் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் அர்ஜுனனை கைது செய்தது. தொடர்ந்து வழக்கானது கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அர்ஜுனனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இன்று தீர்ப்பளித்தார்.