Crime: விழுப்புரத்தில் இரவு நேரத்தில் ஆடு திருடிய ஆசாமி - போலீசாரிடம் சிக்கியது எப்படி?
கண்டமங்கலத்தில் ஆட்டுப்பட்டியிலுள்ள இரும்பு ஷீட்டினை உடைத்து ஆறு ஆடுகளை திருடிய நபரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
விழுப்புரம் : கண்டமங்கலத்தில் ஆட்டுப்பட்டியிலுள்ள இரும்பு ஷீட்டினை உடைத்து ஆறு ஆடுகளை திருடிய நபரை கண்டமங்கலம் போலீசார் கையும் களவுமாக கைது செய்து ஆறு ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
ஆடுகளை திருடிய மர்ம நபர்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் ஆறுமுகம் என்பவர் ஆந்திராவிலிருந்து ஆடுகளை வாங்கி வந்து கண்டமங்கலம் புதுச்சேரி பகுதியில் செயல்படும் ஆட்டு கறி கடைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆந்திராவிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன் ஆடுகளை வாங்கி வந்த ஆறுமுகம், கண்டமங்கலத்திலுள்ள தனது ஆட்டுபட்டியில் விட்டு விட்டு, இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை ஆட்டு பட்டிக்கு ஆறுமுகம் வந்து பார்த்தபோது ஆட்டுபட்டியின் கம்பிகளை உடைத்து உள்ளே இருந்த ஆறு ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிவந்தது.
ஆடுகளை திருடிய ஆசாமி கைது
இதனையடுத்து ஆடு திருட்டு சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் கண்டமங்கலத்தை சார்ந்த சுகுராஜ் என்ற நபர் ஆடுகளை திருடி சென்று அருகிலுள்ள திருபுவனையில் ஆட்டு கறி விற்பனை செய்யும் கடையில் இன்று ஆடுகளை விற்பனைக்காக கொண்டு சென்றபோது கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரனையில் சுகுராஜ் கண்டமங்கலம் பகுதியில் தொடர்ந்து ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.