மேலும் அறிய
கடன் தர மறுத்த வங்கி.. கோபத்தில் மதுரை சகோதரர்கள் எடுத்த முடிவு.. கர்நாடகாவை கதிகலங்க வைத்த கொள்ளை
யூடியூபில் கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்த வீடியோவைவை 2 மாதங்களாக பார்த்து நகை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட நகைகள்
Source : whats app
கடன் தர மறுத்த வங்கியில் 17 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த மதுரையைச் சேர்ந்த அண்ணன், தம்பி தலைமையிலான கும்பல் கைது செய்யப்பட்டு ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ நகை மீட்கப்பட்டது.
வங்கியில் மெகா கொள்ளை சம்பவம்
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தை அடுத்த நியாமதி நகர் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கியில் 500க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைக் கடன் வாங்குவதற்காக தங்க நகைகளை அடகு வைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் 28-த் தேதி இந்த வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்று 13 கோடி மதிப்பிலான 17 கிலோ 750 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை போனதில் தங்கச் சங்கிலிகள், தங்க வளையல்கள் உள்ளிட்டவைகள் அதிகளவு இருந்தன. இதுகுறித்து நியாமதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது மர்மநபர்கள் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா, அலாரம் ஆகியவற்றின் இணைப்பை துண்டித்து கொள்ளையை திட்டமிட்டு திருட்டுத்தனம் செய்தது தெரியவந்தது. மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள், செல்போன் எதுவும் பயன்படுத்தவில்லை.
போலீஸார் விசாரணை
இதனால் இந்த வங்கி கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்கள் குறித்து துப்பறிய முடியாமல் போலீசார் கடந்த 6 மாதங்களாக திணறினர். இருப்பினும் தனிப்படை அமைத்த போலீசார் நெடுஞ்சாலை கண்காணிப்பு கேமரா, வங்கியையொட்டி உள்ள கடைகளில் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை நடந்த போது நியாமதியில் இருந்த ஒரு பேக்கரி மட்டும் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பேக்கரி உரிமையாளர்கள் 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கடை உரிமையாளரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அந்த இருவர் உள்பட 6 பேர் வங்கி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்க நகைகளை போலீசார் மீட்டனர். கர்நாடக தாவணகெரே போலீஸ் சூப்பிரண்டு அபூர் வலகத்தில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட தங்க நகைகள் இருந்தன. இதனை கிழக்கு மண்டல போலீஸ் டி.ஜி.பி. ரவிகாந்தே கவுடா, போலீஸ் ரூப்பிரண்டு உமா பிரசாந்த் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்..,” நியாமதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக 6 பேரை போலீசார் விசாரணை செய்த போது அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விஜயக்குமார் (30 ), அவரது தம்பி அஜய்குமார் (28), தியா மதி பெலகுந்தி கிராமத்தை சேர்ந்த அபிஷேக் (23), நியா மதி சூராஹான் கிராமத்தை சேர்ந்த சந்திரா (23), மஞ்சு நாத் ரத (321, பரமானந்த் (29) ஆகியோர் என தெரியவந்தது.
யூ-டியூப் பார்த்து கொள்ளை
இவர்களில் விஜய்குமார், அஜய் குமார் நியாமதியில் பேக்கரி நடத்தி வந்தனர். மற்ற 4 பேரும் கூலி வேலை பார்த்து வந்தனர். முக்கிய குற்றவாளியான விஜய் குமார் ஏற்கனவே 2 முறை வங்கிக்கு சென்று கடன் கேட்டுள்ளார். வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துள்ளது. இதனால் கோபம் அடைந்து, அவர் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டார் இதற்காக தம்பி மற்றும் கூலி தொழிலாளர்களின் உதவியை நாடினார். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். 6 பேரும் யூ-டியூப் பில் கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்த வீடியோவைவை 2 மாதங்களாக பார்த்து திட்டம் வகுத்துள்ளனர். அதன்படி 6 பேரும் சேர்ந்து ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ 750 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளைக்கு முன்னதாகவும், கொள்ளை நடந்த பின்பும் நியாமதியில் உள்ள சவுடம்மா அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடும் செய்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டனர்
நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து விஜய்குமாரின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் உள்ள தோட்டத்தில் இருக்கும் 30 அடி ஆழ கிணற்றில் பதுக்கி வைத்தனர். இந்த நகைகளை ஓராண்டுக்கு பிறகே வெளியே எடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து வழக்கமான வேலையில் ஈடு பட்டனர். இருப்பினும் போலீசார் திறம்பட செயல்பட்டு வங்கி கொள்ளையில் தொடர்புடைய 6 பேரையும் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ நகைகளை போலீசார் மீட்டு உள்ளனர். கைதானவர்கள் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement